Pages

13 April 2011

ஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா?


ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை கடந்த 11.04.2011 முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. கடந்த 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

11 April 2011

நாங்கள் அணிந்தால் மட்டும்...?

டையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத்
திரையிடச் சொல்வதுப் பிழையா!

10 April 2011

இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்)

எழுத்து: சகோதரி. சபீனா, ஃபிரான்ஸ்

மேற்கத்திய நாடுகளில் முதல் நாடாக சட்டப்பூர்வமாக ஃபிரான்ஸில் அமலுக்கு வந்துள்ள நிகாப் மீதான தடையுத்தரவு இன்று உலகெங்கிலும் உள்ள மீடியாக்களின் பேசு பொருளாக உள்ளது. 

இந்நிலையில், ஹிஜாப் தொடர்பான சில விஷயங்களைப் பார்ப்போம். ஹிஜாப் என்றால் முகம் முழுவதும் மூடி, உடல் முழுவதும் மறைத்து, கையுறைகள், மற்றும் காலுறைகள், அணிவதை விட நம்மை படைத்த அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த அளவின் படி மறைத்தாலே போதுமானது. முதலில் ஹிஜாபை பேணுவது எப்படி என்று பார்ப்போம்.