பாலியல் பலாத்காரம் - அமெரிக்காவிற்கே முதலிடம்
அமெரிக்காவிலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 70 விழுக்காட்டினர் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அமெரிக்கப் பெண்கள் பல்கலைக்கழக சங்கம் (American Association of University Women) சமர்ப்பித்த தகவல்களின் படி, பெரும்பாலான இத்தகையப் பாலியல் தொந்தரவுகள் நடைபெறுவது கடைவீதிகளிலோ, அல்லது மற்ற பொது இடங்களிலோ அன்று; மாறாக, அமெரிக்கக் கல்லூரி வளாகங்களுக்குள்ளேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மூன்றில் இரண்டு பகுதியினருக்கும் மேலான மாணவ மாணவியர்களுக்கு உடல் ரீதியான இத்தகைய தொந்தரவுகள் கல்லூரிகளில் எதிர்பால் மாணவர்கள் மூலம் ஏற்படுவதாகவும் 10 விழுக்காடு மாணவர்களுக்கு எதிர்பால் பள்ளி அலுவர்கள்/ஆசிரியர்கள் மூலம் ஏற்படுவதாகவும் அறிக்கை நீள்கிறது. (புள்ளிவிபரங்களுக்கு நன்றி: Reuters - 24-02-2006)
ஒரே வகுப்பறைகளில் படிக்கும் மாணவர்களும், ஒத்த வயதுடைய மாணவியர்களும் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசி, பழகிக்கொள்ளும் வாய்ப்பு வசதிகளையும் கொண்டதால் இம்மாதிரியான தவறுகள் நடப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சாட்டிங், செல் போனில் அரட்டை, செக்ஸ் ஜோக்குகளை பரிமாற்றிக்கொள்ளுதல் என்ற ரீதியில் வளரும் இந்த நவீன நட்பு(?), விபரீதத்தில் சென்று முடியும் போது மட்டும் குய்யோ, முறையோ எனும் கூக்குரல் எழுகிறது.
ஈவ் டீஸிங்-கில் ஆரம்பித்து பாலியல் பலாத்காரம் வரை கல்வி கற்கும் மாணவர்கள் அனுபவித்து வரும் உடல் மற்றும் மன ரீதியிலான சிக்கல்களைத் தினந்தோறும் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். கடுமையான(?) சட்டங்களைப் பிறப்பித்து இதைத் தடுத்துவிடலாம் என்று அரசாங்கம் எண்ணினாலும் இதற்குத் தீர்வுகாண முடியவில்லை. நாளொரு பலாத்காரமும் பொழுதொரு தற்கொலையுமாக தினம் போய்க்கொண்டுதான் இருக்கிறது.
சரி.. இதன் தீர்வு தான் என்ன? எங்கேயும் தேடி சிரமப்பட வேண்டியதில்லை. திருமறைக் குர்ஆன் மிக எளிய வழியைக் கூறுகிறது.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.(அல் குர் ஆன் 17:32)
விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்பது, ஏதோ விபச்சாரிகளைத் தேடிப்போகாதீர்கள் என்று பொருளல்ல. விபச்சாரம் செய்ய அல்லது அதைத்தூண்டுவதற்கான காரணிகளைக் கண்டுபிடித்து அதன் வாசல்களை அடையுங்கள் என்பதே!
உலக நாடுகளின் பிரச்னைகளை தீர்க்கவே(?) தான் அவதாரம் எடுத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, தன் நாட்டில் பெருகிவரும் இத்தகைய பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக முதன் முறையாக கவலை தெரிவித்திருப்பதும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய முற்படும் முயற்சிகளும் இங்கே குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பிரச்னையையும் இவ்வுலகத்திலிருந்து முற்றிலுமாக நீக்க, அதன் ஆணிவேரை அலசி ஆராய்ந்து அடியோடு ஒழிக்க நினைக்கும் உலக அரசு இயந்திரங்கள், இவ்விஷயத்தில் பாராமுகமாக இருந்து விடாமல் இஸ்லாம் அறிவுறுத்தும் வழிகளைக் கையாண்டால் இத்தகைய பாலியல் பலாத்காரங்களை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.
3 comments:
மன்னிக்க வேண்டும் அனானிமஸ் அன்பரே! "ஆரோக்கியமற்ற" உங்கள் பின்னூட்டங்களுக்கு இங்கே அனுமதியில்லை.
அன்பின் அபூ ஷைமா அவர்களே, தங்கள் வருகைக்கு நன்றி!
இறைவனிடம் நல்வழி கோரும் தங்கள் பிரார்த்தனையில் நானும் இணைந்திருக்கின்றேன்.
Post a Comment