Pages

10 December 2005

உடை ஒரு தடையா?

சமீபத்தில் தமிழ்மணத்தில் ஒரு பதிவில் சானியா மிர்ஜாவின் உடை அணிதலைப் பற்றி கருத்து தெரிவித்திருந்த மல்லிகை-மணம் வலைப்பதிவாளருக்கு, கருத்துக்கள் கடல்போல் குவிந்தது. ஒரு பெண் வலைப்பதிவாளரோ ஒருபடி மேலேபோய் இதுபற்றி தனிப்பதிவே போட்டுவிட்டு பின்னர் பின்னூட்டப் பிரச்னைகளால் வருத்தப்பட்டார்.

கொழுவி என்பவரோ இதை அபத்தம் என்றதோடு நில்லாமல் "100 m. ஓட்டப் பந்தயத்துக்கு இப்படி மூடிக்கட்டிக்கொண்டு ஓடி ஒருவரால் வெல்ல முடியுமென்று யாராவது சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? வேண்டுமானால் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்கள், அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்கு இவ்வுடைப்பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எல்லா விளையாட்டுக்களுக்கும் அது பொருந்துமென்பது கேலிக்கூத்து" என்றார்.

அத்தோடு நின்றாரா என்றால் இல்லை. "இதை மறுத்துரைக்க வந்த பர்வீன் கூட கிரிக்கெட்டையும் டெனிசையும்தான் ஒப்பிட முடிந்தது. உயரம் பாய்தலையும் அதையும் ஒப்பிட முடியவில்லை." என்று பெரும்போடு போட்டார்.

Babble என்பவரோ நக்கலாக "மேலே உள்ள படங்களில், அவர்கள் வெற்றி பெற்றார்களா என்று குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்" என்றார்.
அத்தி பூத்தார்போல் ஆதரித்து எழுதிய மு.மயூரன் "முதலாளிய ஊடகங்களால் மிகைப்படுத்தப்படும் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்களின் உடைபற்றிய எனது அவதானிப்பில்,பெரும்பாலும் அது தமது உடற்பகுதிகளை வெளிப்படுத்தி அதன்மூலம் சில நலன்களை பெறுவதற்கானதாகவே இருக்கிறது" என்றார்.

சரி விஷயத்திற்கு வருவோம்! மேலேலேலே கண்ட பின்னூட்டங்களுக்குப் பதிலே இப்பதிவு. வளைகுடா நாடுகளில் ஒன்றான (தோஹா) கத்தரில் 2006 ல் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப்போட்டி-களுக்கான வெள்ளோட்டமாக, பிரம்மாண்டமான முறையில் நடந்து வரும் 3வது மேற்கு ஆசிய விளையாட்டுப்போட்டி-களின் முடிவுகள் இன்று (அதாவது டிசம்பர்-10, 2005) வெளியாகி உள்ளது.

கலந்து கொண்டவை மேற்காசிய நாடுகள் என்பதால் போட்டிகளில் இஸ்லாமிய உடையணிந்த பெண்களை விட, சாதாரண உடையணிந்து கலந்து கொண்டவர்கள் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடலை மறைக்கும் உடையணிந்து விளையாட்டில் வெற்றி பெற முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும்முகமாக வெற்றி பெற்ற இஸ்லாமிய பெண்களில் சிலரின் விபரங்கள் கீழே:



உயரம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈரானைச் சேர்ந்த நபிஸாதிக் ஃபர்த்ஸ்

*********

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த பஹ்ரைனைச் சேர்ந்த பெண் வீராங்கனை ரோக்யா அல் கஸாரி.

மேலும் காண்க:

ஈரான் காவல்துறையில் பெண்கள்

Sports & Hijab

இஸ்லாம் ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளை பெண்களுக்கு (குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில்)கொடுத்தாலும் பெண்களின் உடலமைப்பைப் கணக்கில் கொண்டு உடையளவில் மாற்றம் ஏற்படுத்துகிறது. கண்ணியத்திற்காக உள்ள உடைக்கட்டுப்பாடுகளினால் இப்போது எதில் பின்னடைவு வந்துவிட்டது? என்று இவர்கள் பட்டியலிடுவார்களா? எந்த ஒரு உலக வாழ்க்கை நெறியிலும் கூறப்படாத பெண் சமத்துவத்தை இஸ்லாம் கொடுக்கும்போது, பெண்ணுரிமை பேசுவதாக எண்ணிக்கொண்டு கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?

சிறந்த வலைப்பூக்களுக்கான (Weblog Award) இறுதிகட்ட சுற்றில் வெற்றி பெற்ற அமெரிக்கப்பெண்மணி ஒருவரின் இது தொடர்பான கருத்து:

2 comments:

Anonymous said...

சரியான நெத்தியடி.

இருந்தாலும் இவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

விளையாட்டுக்களில் கலந்து கொள்ள பெண்களுக்கு உடை தடையாக இருக்கும் என்று தவறாக புரிந்து கொண்ட உண்மையிலேயே பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்ட பெண்களை கண்ணியமாக காண்பவர்கள் வேண்டுமானால் மாற்றிக் கொள்வார்கள்.

ஆனால் இவர்களது நோக்கம் அதுவல்லவே!. எதையாவது கூறி எப்படியாவது பெண்களை துகிலுரிந்து காண ஆசைப் படும் வக்கிர எண்ணம் கொண்ட காம கொடூரர்கள் தங்கள் நிலையை எப்படி மாற்றிக் கொள்வார்கள்? வேண்டுமானால் இனி அடுத்து பாக்கி உள்ள நீச்சலை வேண்டுமானால் பிடித்து தூக்கிக் கொண்டு வருவார்கள்.

மற்ற பெண்களை தாயாகவும், சகோதரிகளாகவும் மதிக்கத் தெரியாத இந்த மூடர்களுக்கு என்ன கூறினாலும் உறைக்கப் போவதில்லை!

அபூ ஸாலிஹா said...

கருத்திட்டமைக்கு நன்றி இறைநேசன்!

இஸ்லாத்தில் பெண்களின் வழங்கப்பட்டுள்ள கண்ணிய நிலைபாடு பற்றி கூறப்பட்டிருப்பதையும், அவை உலக அளவில் அமலில் இருப்பதையும் தெளிவான ஆதாரங்களுடன் சுட்டுவதற்கே இப்பதிவு.

கண்ணிருந்தும் குருடனாக, காதிருந்தும் செவிடனாகத்தான் இருப்பேன் என்பவர்களின் மனத் தெளிவிற்காக படைத்தவனிடம் பிரார்த்தனை செய்வதைவிட செய்வதொன்றுமில்லை.