Pages

05 March 2006

ஆண்களும், பெண்களும்!

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:124
___________________________________________________

3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். 'உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்...

ஸூரத்துல் ஆலஇம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) 3:195
___________________________________________________

இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்.

ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:221
___________________________________________________

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.

ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:228
___________________________________________________

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:32
____________________________________________________

4:7 பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே¢ (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:7

3 comments:

வஹ்ஹாபி said...

'இம்ரஅ' என்ற அரபுச் சொல் எல்லா இடங்களிலும் 'பெண்' என்ற பொருள் தராது. 'மனைவி' என்ற பொருளிலும் அச்சொல் ஆளப்படும்.

அவ்வாறே அதன் பன்மையான 'நிஸா' என்ற சொல் எல்லா இடத்திலும் 'பெண்கள்' என்ற பொருள் தராது; 'மனைவியர்' என்றும் பல இடங்களில் பொருள் தரும்.

நீங்கள் எடுத்தாண்டிருக்கும் இறைவசனங்களை இப்போது மீண்டுமொரு முறை படித்துப் பாருங்கள்.

நன்றி!

அபூ ஸாலிஹா said...

அன்புச் சகோதரர் வஹ்ஹாபி அவர்களே, ஆழமான தங்கள் கருத்திற்கு நன்றி!

இறைச்செய்தி இறங்கிய சூழலின் பின்புலத்தை முழுமையாக அறிந்து குர் ஆன் வசனங்களை எடுத்தாள்வதில் இனி கவனம் செலுத்துகிறேன் இன்ஷா அல்லாஹ்!

அபூ ஸாலிஹா said...

டெஸ்ட் கண்ணா டெஸ்ட்