Pages

22 July 2008

பர்தா அணிந்த முஸ்லிம் பெண் குடியுரிமை வழங்க பிரான்ஸ் மறுப்பு


ஹிஜாப் அணிந்த காரணத்தினால், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கு குடியுரிமை வழங்க பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரி பாய்சா. இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். 2000ம் ஆண்டிலிருந்து பிரான்சில் வசித்து வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அனைத்தும், பிரான்ஸ் நாட்டிலேயே பிறந்தன. பிரெஞ்ச் மொழியிலும் பாய்சா நன்றாகப் பேசுவார். கடந்த 2005ம் ஆண்டில், இவர் பிரான்ஸ் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். ஆனால், பிரான்ஸ் நாட்டு கலாசாரத்துடன் இன்னும் ஒன்றுபடவில்லை எனக் கூறி, அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.


இந்நிலையில், மீண்டும் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவர் ஹிஜாப் (பர்தா) அணிவதாலும், இஸ்லாமிய மத நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றுவதாலும், அந்த நடைமுறைகள் ஆண், பெண் சமம் என்ற பிரான்ஸ் நாட்டின் அடிப்படையான கோட்பாடுகளுக்கு முரணாக இருப்பதாலும், பாய்சாவிற்கு குடியுரிமை வழங்க முடியாது என, பிரான்ஸ் அரசு மறுத்து விட்டது.

கருத்துச் சுதந்திரம் பற்றி பேசிக் களைத்துப் போய், இப்போது "தனிமனித சுதந்திரம்" வியாபாரத்தில் குதித்திருக்கும் ஃபிரான்ஸில் முஸ்லிம்கள் மூன்றாம் தர மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள் என்பது மீண்டுமொரு முறை உலகிற்கு முன் நிரூபணமாகியுள்ளது.

ஒரு பெண் தன் இஷ்டத்திற்கு ஆடைகளைக் களைந்து கொள்ள அனுமதிக்கும் அதே நாட்டில் ஒரு பெண் தன் விருப்பப்படி கண்ணியத்தைப் பேணும் ஒரு உடையினை அணிந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுவது விசித்திரத்திலும் விசித்திரமாகும்.

தனது நாட்டில் கட்டிக் காக்கும் கலாச்சாரம்(?!) பறிபட்டுப் போய் விடுமோ என்ற கவலையில் எழும் இஸ்லாமோஃபோபியாவின் தாக்கம் ஃபிரான்ஸின் இந்த இரட்டை நிலையில் நன்கு தெளிவாகிறது.

நன்றி: மொராக்கோ டெய்லி

http://www.dailymail.co.uk/news/worldnews/article-1034412/Veiled-Muslim-woman-denied-French-citizenship-amid-concerns-radical-religious-views.html

2 comments:

முகவைத்தமிழன் said...

பிரான்ஸ் மட்டுமல்ல மேற்க்கத்திய நாடுகளின் அனைத்து அரசியில் தவைர்களுமே, யூத, கிருத்துவர்களின் கைக்கூலிகளாகவு உள்ளார்கள்.

ஹிஜாப் விசயத்தில் மட்டுமல்ல இசுலாமியருக்கு எதிரான ஒவ்வொரு விசயத்திலும் இவர்கள் யூத, கிருத்துவ வெறியர்களின் திட்டங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

முஸ்லிம்களின் ஆதரவாளர்கள், ஜனநாயகவாதிகள் என்றெல்லாம் இவர்கள் நேரத்திற்கு தகுந்தவாறு போடுவதெல்லாம் வெறும் வேஷம் மட்டுமே!

சமீபத்தில் தனது முகத்திரையை கிழித்து தன்னை யூத தீவிரவாதிகளின் ஆதரவாளன் என்று வெளிச்சம் போட்டு காட்டிய பிரித்தானிய பிரதமர் முதல் பிரான்ஸ் ஜனாதிபதி வரை அனைவரும் ஒரே அஜென்டாவின் கீழேயே வேலை செய்கின்றார்கள் அது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற யூத கிருத்துவர்களின் திட்டமே அது.

அபூ ஸாலிஹா said...

கருத்தினைப் பகிர்ந்தமைக்கு நன்றி முகவைத்தமிழன் அவர்களே!

//பிரான்ஸ் மட்டுமல்ல...//

//ஹிஜாப் விசயத்தில் மட்டுமல்ல இசுலாமியருக்கு எதிரான ஒவ்வொரு விசயத்திலும்...//

தெளிவாகப் புரிந்து வைத்துள்ளீர்கள். கொள்கை அளவில் இஸ்லாத்தோடு முட்டி மோத திராணியற்றவர்கள், துவேஷமும் காழ்ப்புணர்ச்சியும் கொப்பளிக்க இது போன்ற கீழ்த்தரச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சத்தியத்தினை மூடி மறைக்க எண்ணும் சதியினை இஸ்லாமியர்கள் விளங்கி இயன்ற அளவில் எதிர்கொள்ள முன் வரவேண்டும்.