Pages

20 December 2005

விரும்பி இஸ்லாத்தைத் ஏற்கும் ஜெர்மன் பெண்கள்!

ப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வருடம் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

சுவாரசியமான விஷயம் இதில் என்னவென்றால் இஸ்லாத்தை தழுவியுள்ள 1000க்கும் மேற்பட்டோரில் பெண்களே அதிகம் என்பதுதான்.

ஜெர்மனியின் Berliner Zeitung பத்திரிகை மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இப்பெண்களின் கணவன்மார்கள் பிற சமயத்தினராய் இருந்தும்கூட இஸ்லாத்தின் கோட்பாடுகளால் கவரப்பட்டு ஏற்றுக்கொண்டவர்கள் என்பதும் பெரும்பாலான பெண்கள் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

32 இலட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் ஜெர்மனியில் 14,352 பேர் ஜெர்மானிய வம்சாவழியினராவர் என்பதும் ஒரு துணைச்செய்தி!

19 December 2005

இஸ்லாத்தின்-பால் அமெரிக்கப் பெண்கள்

பெற்றோர்களின் மத நம்பிக்கை அவர்களின் ஆன்மீக எதிர்பார்ப்பை நிறைவேற்றாதாலும் வரும் கேள்வி அறிவுக்கு புராதன நம்பிக்கைகள் ஈடு கொடுக்க முடியாததாலும் அமெரிக்காவில் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகிறது,சமீபத்தில் அமெரிக்கா இஸ்லாமியக் கவுன்சில் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது. தேசிய அளவில் அமெரிக்காவில் உள்ள கிரேட்டர்போஸ்டன் முஸ்லிம் சமூகத்தில் பெண்களே மூன்றில் இரு பங்காக இருக்கிறனர்.

இஸ்லாத்தின் பக்கம் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதால் புதிர் இருப்பதாக அப் பெண்களின் குடும்பத்தார் கருதுகின்றனர். எந்த ஒரு சமயம் பெண்களை அடிமைபடுத்தி அடக்கி ஆள்கிறது என்று உருவகப்படுத்திக் காட்டப்படுகிறதோ அந்த மதத்தை நோக்கிப் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது, ஆனால் புதிதாக இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம் பெண்கள் ஒரு சேர அக்குற்றச் சாட்டை மறுக்கின்றனர். பிரச்சார நோக்கத்துடன் இஸ்லாத்தின் மீது பொய்யான தோற்றத்தை உருவகப்படுத்திக் காட்டப் படுகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக சொத்துரிமை வாரிசுரிமை ஆகிய உரிமைகளை மேலை நாட்டு கலாச்சாரம் பெண்களுக்குக் கொடுப்பதற்;கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாத்தை தழுவும் வெள்ளை கிறிஸ்துவப் பெண்கள் வாழ்க்கையில் இஸ்லாம் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இப்புதிய முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் என்னும் தலைதுண்டினால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அணியும் ஆடையிலும் வித்தியாசம் தெரிகிறது, கவர்ச்சி ஆடையை அவர்கள் வெறுக்கிறார்கள.

நீண்ட தொளதொளப்பான ஆடையை அணிகின்றனர். அது அவர்களின் ஒழுக்க மாண்பை கூட்டிக்காட்டுகிறது. அவர்களின் உணவுப்பழக்கமும், இஸ்லாமிய விதிமுறைக்கு மாறுகிறது. பன்றி மாமிசத்தை அவர்கள் தொடுவதில்லை. புகைப்பது இல்லை. குடிப்பழக்கத்துக்கு அவர்கள் முழுக்குப் போடுகிறார்கள். அவர்களின் ஆன்மீகப்பாதை ஐங்காலத் தொழுகை இடம் பிடித்துக் கொள்கிறது. இஸ்லாத்தை ஏற்றதும் அவர்கள் புதுப்பொழிவுடன் புதிய மனிதர்களாக உள்ளும் புறமும் மாற்றமடைகின்றனர். அவ்வாறு மாற்றமடைந்த பெண்கள் சிலரின் தகவல்களைத் திரட்டி கிழே தருகிறோம்:

கிரேஜினோ கிரேட்டர், போஸ்டனில் உள்ள ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர், அவரின் தந்தை நம்பிக்கை இழந்து விட்ட கத்தோலிக்கர், தாயோ விறுவிறுப்பான பெந்த கொஸ்ட். கிறிஸ்துவ சமயப் பற்றுக் கிடையே கிரேஜினோ அலைகழிக்கப்பட்டார். சந்தோஷமும் குழப்பமும் அவர் மனதில் குடிகொண்டிருந்தது அப்பொது அவருக்கு வயது 14. வெல்ஸலி ஜூனியர் கல்லூரியின் மாணவி, குழப்பத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு உலக மதங்களை ஆராய முற்பட்டார். புத்தம், ஹிந்து, யூதம், மற்றும் இஸ்லாம் ஆகியவைகளை ஆழ்ந்து படித்தார். முடிவில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாம்தான் தனது தாயின் கிறிஸ்துவத்தை விடவும் உண்மையை ஒங்கி ஒலிக்கிறது என்று நம்புகிறார். கடந்த மார்ச் 8-ம் தேதி போஸ்டனில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்வைத்தவிர வணக்கத்துக்குரிய கடவுள் யாருமில்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்,, என்று ஷஹாதத் (இஸ்லாமிய உறுதி மொழி) சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.

கிறிஸ்துவச் சமயம் வாரம் ஒரு முறை சர்ச்சுக்குப் போவதும் ஒரு நல்ல மனிதராக இருப்பதும் மட்டுமே. ஆனால் இஸ்லாம் ஒரு முழு வாழ்க்கை நெறி என்று அவர் கூறிகிறார். மகளின் மனமாற்றம் அவரது தந்தைக்கு அடங்காக் கோபத்தை ஏற்படுத்தியது, உனக்கு ஒரு நல்ல வேலையோ அல்லது நல்ல கணவனோ கிடைக்காது, என்று அவர் வருந்துகிறார். அவரது தாய் அழுது தவித்து ஏசுவை துணைக்கு அழைக்கிறார். வசந்த கால விடுமுறையில் வீட்டிற்குப் போன கிரேஜினோவிற்கு நல்ல வரவேற்பு இல்லை. அவரது தந்தை, ஹிஜாப் அணிந்த அவரை பார்க்க சகிக்காமல் தனது மற்ற குழந்தைகளையும் அவரோடு பழக விடாமல் தடுக்கிறார். ஆனால் இஸ்லாம் குடும்ப உறவு முறையை பேணிக் கொள்ள அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் கிரேஜினோ தமது உறவுகளைக் குடும்பத்துடன் புதுப்பித்துக்கொள்ள இன்னும் முயற்சி செய்து வருகிறார், ஆனால் அது கடினமானதாக அவருக்கு தெரிகிறது. ஏனெனில் அவரது தந்தை கல்லூரிக்கு கட்டவேண்டிய கட்டணத்தை கட்டுவதை நிறுத்தி விட்டார்.

இருப்பினும் கிரேஜினோ ஹிஜாப் அணிவது தம்மை பல சங்கடங்களிலிருந்து விடுவிக்கிறதென்று கூறுகிறார். சுருள்சுருளான இடுப்பு வரை நீண்ட அழகிய தலைமுடி அவருக்குண்டு. ஹிஜாப் அணியாத காலங்களில் துடுக்குதனம் கொண்டோரை சந்திக்க நேரும் போது அவர்களில் சிலர் நெருங்கி வந்து, இந்த அழகிய கூந்தலை நான் தொடலாமா? என்று தன்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்று கூறுகிறார். இப்பொது ஹிஜாப் அணிவது தம்மை இப்படிப் பட்ட இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று சொல்கிறார். இப்போது தன்னை யாரும் உற்று நோக்குவதில்லை. உடல் அழகையோ, உருவ அமைப்பையோ, கூந்தல் அலாங்காரத்தையோ யாரும் நினைத்துப் பாhப்;பதில்லை. குறும்புத்தனம் செய்பவர் கண்ணுக்கு நாம் தெரிவதில்லை என்று கிரேஜியானோ கூறுகிறார்.

மற்றுமொரு பெண்மணி கிறிஸ்டினா சபியா டோபியாஸ்நாகி. அவர் சாமர்வில்லாவைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ஒரு கத்தோலிக்கர். தாய் ஒரு யூதர். ஆனால் அவர் யூத மதக்கோட்பாடுளை கடைபிடிப்பதில்லை. சபியாவுக்கு வயது முப்பது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் இஸ்லாத்தை தழுவினார்.

மேலைநாடுகளில் கடைபிடிக்கப்படும் இஸ்லாம் இலட்சியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது, இங்கு நாம் எப்படி இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறோம் என்பதை பல நாடுகள் அக்கறையுடன் கவனித்து வருகிறன்றன. அந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் சரியான உதாரணமாக அமையலாம். ஏனெனில் உலகில் வேறு நிலப்பரப்புகளை விடவும் அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான சமத்துவ ஒருமைப்பாடு கொண்ட இஸ்லாமியக் கலாச்சாரம் அவர்களுக்கு சிறந்த முன் மாதிரியாகத் திகழும் திறம் படைத்தது. அது உலக அளவில் முஸ்லிம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்று சபியா கூறுகிறார்.

மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல் வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.
ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி, கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்;.

லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன். நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவ்வாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது.

நன்றி: தமிழ்முஸ்லிம்.காம்

இஸ்லாமிய பெண் வீரர் - ஒரு சிறு பயோடேட்டா!

Image hosted by TinyPic.com


பெயர்: லிதா ஃபரிமான்

நாடு: ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி

திறமை: ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் வென்றவர்.

நம்பிக்கை: 5 வேளை தொழுகைகளையும் நேரம் தவறாமல் தொழக்கூடியவர். பயிற்சி களம் முதல் போட்டி மைதானம் வரை இஸ்லாமிய ஹிஜாப் முறைப்படியிலான உடையணிவதில் விருப்பம் கொண்டவர்.

தனிப்பட்ட கருத்து: எங்கள் நாட்டில் விளையாட்டில் ஆண்களுக்குள்ள எல்லா வாய்ப்புகளும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

11 December 2005

ஹிஜாப் : அடக்குமுறைச் சின்னமல்ல

கனடாவிலேயே பிறந்த வளர்ந்த இந்த முஸ்லிம் பெண்மணி, பாரம்பர்யமிக்க ஹிஜாப் உடையை அணிய முடிவெடுத்துக் கொண்டார். அவர் ஹிஜாபை அணிவதைப் பார்த்த மக்கள் அவரை ஒரு தீவிரவாதியாக அல்லது அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட பெண்மணியாகப் பார்க்கின்ற அதேவேளையில், அவர் தன்னுடைய விடுதலையே இதில் தான் இருக்கின்றது என்று உணர்கின்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது, என்னுடைய ஆடைக்குள் ஏகே 47 ரக துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவது போல, ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போலப் பார்க்கின்றார்கள். அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்ப்பது போல, சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி விளம்பரத்தைப் பார்ப்பது போல வெறித்துப் பார்க்கின்றார்கள். அவர் என்னை எந்தவிதமாகப் பார்க்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நானறிய மாட்டேன்.

என்னை முழுவதுமாக அவர்கள் ஒருவிதமாகப் பார்க்கின்றார்கள், வெறித்த பார்வையுடன், இன்னும் திருட்டுப் பார்வையுடன். நீங்கள் பார்ப்பது.., நான் ஹிஜாபை அணிந்திருக்கின்றேன், எனது தலையை தலைத்துண்டால் மறைத்திருக்கின்றேன், இன்னும் கழுத்தை, மற்றும் தொண்டைக் குழியையும் மறைத்திருக்கின்றேன். இதனை நான் ஏன் அணிகின்றேன் என்றால்.., நான் ஒரு முஸ்லிம்.., எனது உடம்பு என்பது எனக்கு மட்டுமே சொந்தமானது.., என்று நம்பக் கூடிய சமுதாயத்தைச் சேர்ந்தவள்.., பிறருக்கு காட்சிப் படுத்துவதற்காக எனது உடம்பை திறந்து போட்டுத் திரிகின்ற சமுதாயப் பெண்ணல்ல..!

இன்றைக்கு இளம் வயதுப் பெண்கள் ஹிஜாப் அணிவதன் பக்கம் மீண்டு வருகின்றார்கள், அது அவர்களது உண்மையான நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றது - எனது உடம்புக்கு நானே சொந்தக்காரி என்றும், இன்னும் அது தனது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்ற உயர்ந்த நோக்கத்தின் கீழ் அதனை அணிவதன் மூலம் வெளிப்படுத்துகின்றார்கள்.

திருமறைக்குர்ஆனானது ஆணும், பெண்ணும் சமமே என்று கூறுகின்றது, ஒரு தனிமனிதனை அவன் சார்ந்திருக்கின்ற பாலினம், அழகு, செல்வம் அல்லது தகுதியைக் கொண்டு தீர்மானிக்க முடியாது. அதாவது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விடச் சிறந்தவன் என்று அளப்பதற்குரிய ஒரே அளவு கோள்.., அவனது குணநலன்கள் தான்.

இதுவன்றி.., நான் ஹிஜாப் அணிவதைப் பார்த்து இந்த மக்கள் என்னை பார்த்து மிகவும் சங்கடப்படுகின்றார்கள். எல்லா வற்றிலும்.., நானோ மிக இளவதுடையவள்.., கனடாவில் பிறந்தவள்.., அங்கேயே வளர்ந்தவள்.., கல்லூரிப் பட்டாதாரி -- இவ்வளவு இருந்தும் இதனை நீ ஏன் செய்கின்றாய்.., என்று என்னை அவர்கள் கேட்கின்றார்கள்.

முன்பின் அறியாத சிலர் சப்தமாக அதேவேளையில் மிகவும் நிதானமாக ஆங்கில மொழியில் நான் நடமாடும் தேர் போன்று இருப்பதாக என்னிடம் பேசுகின்றார்கள். இந்த உடையை உடுத்திக் கொண்டு கனடாவில் நான் வாழ்வது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகக் கூறுகின்றார்கள், அவர்கள் என்னிடம் கேட்கும் நேரம் என்னுடைய மனநிலை சரியாக இருக்கும்பட்சத்தில்.., அது ஒரு வேடிக்கையாகவே எனக்கு இருக்கும்.

ஆனால்.., வட அமெரிக்கச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவளும் இன்னும் அவளது வாழ்வுக்கான முன்னேற்றப் பாதைகள் பல அவள் முன் இருந்தும்.., அந்த 21 வயதில்.., அவை அனைத்தையும் அனுபவிக்க வேண்டியவள்.., தான் விரும்பக் கூடிய ஆடையை அணிந்து அதன் மேலாக தன்னை மூடிக் கொள்ள விரும்புகின்றாளே.., ஹிஜாப் என்ற உடையை அணிந்து, இன்னும் முகத்தையும், கைகளையும் மட்டுமே அவள் வெளிக் காண்பிக்கக் கூடியவளாகி விட்டாளே ஏன்?

ஏனென்றால்.., அது எனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கின்றது..!
சிறு வயதுக் குழந்தைகளில் கற்றுக் கொடுக்கப்பட்டது என்னவென்றால்.., அவர்களது தகுதி என்பதே அவர்கள் தங்களைக் கவர்ச்சிப் பொருளாக ஆக்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது என்பதைத் தான். பிறரைக் கவர வேண்டும் என்பதற்காகவே தங்களை அலங்கரித்துக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றோம் என்பதை நாங்கள் உணர்கின்றோம்.., இத்தகைய செயல்கள் பிரயோஜனமற்றவை என்பதையும் அரைகுறையாக
இத்தகைய செயல்பாடுகளை தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அடக்குமுறையாகக் கருதுகின்ற பெண்கள் நகைப்புக்கும் வெறுப்புக்கும் உரியவர்களாகக் கருதப்படுகின்றார்கள். அத்தகைய பெண்கள் செயற்கையான அலங்காரங்களைத் தவிர்க்கின்றார்கள்.., தங்களது கால்களில் உள்ள முடிகளை மழித்து கொள்வதில்லை அல்லது தங்களது உடம்பை திறந்து போட்டும் திரிவதில்லை.., இத்தகைய பெண்களை சமூகத்தில் உள்ள ஆண்களும், பெண்களும்.., பிரச்னைக்குரியவர்களாகக் கருதி அவர்களை நடத்துகின்றார்கள்.

நன்றி: ஏ1ரியலிஸம்.காம்

அமெரிக்கா : பாலியல் பலாத்காரங்கள்

பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் :
ஆண்களும் பெண்களும் கலந்து பணியாற்றும் இடங்கள் எதுவாக இருப்பினும் அவற்றில் 40-70 சதவீதப் பெண்களும், 10-20 சதவீத ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள (Equal Employment Opportunity Commission (EEOC) கமிஷனிடம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் வழக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று குற்றம் சாட்டும் ஆண்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இப்பொழுது மும்மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது இந்த அமைப்பு. சமீபகாலமாக, பணியிடங்களில் தங்களின் மேலதிகாரிகளாக வேலைபார்க்கும் பெண்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று 11 சதவீத வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

1999 ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் 62 சதவீத கம்பெனிகள் தங்களது தொழிலாளர்களுக்கு பாலியல் பலாத்காரத்தினை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பதற்கான பயிற்சியை வழங்கி இருக்கின்றன. இதில் 97 சதவீதக் கம்பெனிகள் பாலியல் பலாத்காரத்தினை எதிர்கொள்வது குறித்த கொள்கையை வகுத்து வைத்துள்ளன.

லூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது. அதில்,
பணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.


7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,
62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்
இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும்
59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்
41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்
பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :
43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்
8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.


கல்விக் கூடங்களில் :

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :

85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்
18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்
13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்
அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,
25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்
10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றத
அமெரிக்காவில் உள்ள American Psychological Association என்ற அமைப்பு பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்
12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்
21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்
11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்
3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள Minnesota high school students (reported by Susan Strauss, Sexual Harassment and Teens) அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :
பள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்
இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்
50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.

நன்றி: தமிழ் இஸ்லாம்.காம்

10 December 2005

உடை ஒரு தடையா?

சமீபத்தில் தமிழ்மணத்தில் ஒரு பதிவில் சானியா மிர்ஜாவின் உடை அணிதலைப் பற்றி கருத்து தெரிவித்திருந்த மல்லிகை-மணம் வலைப்பதிவாளருக்கு, கருத்துக்கள் கடல்போல் குவிந்தது. ஒரு பெண் வலைப்பதிவாளரோ ஒருபடி மேலேபோய் இதுபற்றி தனிப்பதிவே போட்டுவிட்டு பின்னர் பின்னூட்டப் பிரச்னைகளால் வருத்தப்பட்டார்.

கொழுவி என்பவரோ இதை அபத்தம் என்றதோடு நில்லாமல் "100 m. ஓட்டப் பந்தயத்துக்கு இப்படி மூடிக்கட்டிக்கொண்டு ஓடி ஒருவரால் வெல்ல முடியுமென்று யாராவது சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? வேண்டுமானால் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்கள், அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்கு இவ்வுடைப்பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எல்லா விளையாட்டுக்களுக்கும் அது பொருந்துமென்பது கேலிக்கூத்து" என்றார்.

அத்தோடு நின்றாரா என்றால் இல்லை. "இதை மறுத்துரைக்க வந்த பர்வீன் கூட கிரிக்கெட்டையும் டெனிசையும்தான் ஒப்பிட முடிந்தது. உயரம் பாய்தலையும் அதையும் ஒப்பிட முடியவில்லை." என்று பெரும்போடு போட்டார்.

Babble என்பவரோ நக்கலாக "மேலே உள்ள படங்களில், அவர்கள் வெற்றி பெற்றார்களா என்று குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்" என்றார்.
அத்தி பூத்தார்போல் ஆதரித்து எழுதிய மு.மயூரன் "முதலாளிய ஊடகங்களால் மிகைப்படுத்தப்படும் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்களின் உடைபற்றிய எனது அவதானிப்பில்,பெரும்பாலும் அது தமது உடற்பகுதிகளை வெளிப்படுத்தி அதன்மூலம் சில நலன்களை பெறுவதற்கானதாகவே இருக்கிறது" என்றார்.

சரி விஷயத்திற்கு வருவோம்! மேலேலேலே கண்ட பின்னூட்டங்களுக்குப் பதிலே இப்பதிவு. வளைகுடா நாடுகளில் ஒன்றான (தோஹா) கத்தரில் 2006 ல் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப்போட்டி-களுக்கான வெள்ளோட்டமாக, பிரம்மாண்டமான முறையில் நடந்து வரும் 3வது மேற்கு ஆசிய விளையாட்டுப்போட்டி-களின் முடிவுகள் இன்று (அதாவது டிசம்பர்-10, 2005) வெளியாகி உள்ளது.

கலந்து கொண்டவை மேற்காசிய நாடுகள் என்பதால் போட்டிகளில் இஸ்லாமிய உடையணிந்த பெண்களை விட, சாதாரண உடையணிந்து கலந்து கொண்டவர்கள் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடலை மறைக்கும் உடையணிந்து விளையாட்டில் வெற்றி பெற முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும்முகமாக வெற்றி பெற்ற இஸ்லாமிய பெண்களில் சிலரின் விபரங்கள் கீழே:



உயரம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈரானைச் சேர்ந்த நபிஸாதிக் ஃபர்த்ஸ்

*********

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த பஹ்ரைனைச் சேர்ந்த பெண் வீராங்கனை ரோக்யா அல் கஸாரி.

மேலும் காண்க:

ஈரான் காவல்துறையில் பெண்கள்

Sports & Hijab

இஸ்லாம் ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளை பெண்களுக்கு (குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில்)கொடுத்தாலும் பெண்களின் உடலமைப்பைப் கணக்கில் கொண்டு உடையளவில் மாற்றம் ஏற்படுத்துகிறது. கண்ணியத்திற்காக உள்ள உடைக்கட்டுப்பாடுகளினால் இப்போது எதில் பின்னடைவு வந்துவிட்டது? என்று இவர்கள் பட்டியலிடுவார்களா? எந்த ஒரு உலக வாழ்க்கை நெறியிலும் கூறப்படாத பெண் சமத்துவத்தை இஸ்லாம் கொடுக்கும்போது, பெண்ணுரிமை பேசுவதாக எண்ணிக்கொண்டு கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?

சிறந்த வலைப்பூக்களுக்கான (Weblog Award) இறுதிகட்ட சுற்றில் வெற்றி பெற்ற அமெரிக்கப்பெண்மணி ஒருவரின் இது தொடர்பான கருத்து:

11 November 2005

இஸ்லாம் ஒரு குடும்பவியல் நெறி!

இது விஞ்ஞான யுகம். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நவநாகரிகம் வளர்ந்தோங்கிக் கொண்டே செல்கின்றது. இந்த நாகரிக மாற்றம் காரணமாக மனித வாழ்க்கை பெரிதும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறது. தொழில் வளர்ச்சியும், நுகர்பொருள் கலாச்சாரமும் மேல்நாடுகளில் மிதமிஞ்சிய முக்கியத்துவத்தைப் பெற்றுத் திகழ்கின்றன. இதன் விளைவாகத் தனிமனித நலனும் லாப நோக்குமே முதன்மையாகிவிட்டன.

சமூக நீதி என்பது இன்றைக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சமூகம் என்று வருகிறபோது குடும்பம் அதில் சிறப்பிடம் வகிக்கிறது, சமூகத்தின் அடிப்படை அமைப்பு குடும்பமேயாகும். சமுதாய அமைப்பின் தொட்டில் குடும்பம் எனலாம்.

இன்று மேலை நாடுகளில் தலைவிரித்தாடும் தனிமனித நலனும் லாப நோக்கும் குடும்ப இயல் என்னும் அடிப்படை அமைப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதன் விளைவாக வருங்காலத்தில் குடும்பம் என்ற அமைப்பு நிலைத்திருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகங்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன.

குடும்பக் கட்டுமானத்தின் இன்றியமையாத அங்கமாகிய திருமணம் என்பதெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத காரியங்கள் என அறிவு ஜீவி'கள் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர். ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கணவன் மனைவியாகக் கூடிவாழ்வதுதான் இல்லறமாகிய குடும்பமாகும் என்னும் சித்தாந்தத்திற்கு இப்போது ஆபத்து வந்து விட்டது. ஓர் ஆண் இன்னொரு ஆணுடன் கூடிக்கலந்து வாழ்க்கை நடத்துவதும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதும் இல்லற அமைப்பேயாகும் என்றெல்லாம் நவீனக்கோட்பாடுகள் பிதற்றப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு பெண்ணோடு கூடி வாழ்தலையும் ஏன் குடும்பம் எனச் சொல்லக்கூடாது? என்ற விபரீத வினாக்களுக்கெல்லாம் தாக்குப் பிடிக்க முடியாமல் இன்று குடும்பம் என்னும் சமுதாய அமைப்பு சிதைவுப்பட்டு நிற்றலைக் காண்கிறோம்.

இக்காரணங்களினால் இன்று மோலை நாடுகளில் குடும்பம் என்னும் உன்னத அமைப்பு ஆட்டம் கண்டு கிடக்கிறது. குடும்ப அமைப்புப் பற்றி யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை என்னும் மனோபாவம் மேனாடுகளில் நவநாகரிக ஆண்-பெண்களிடம் மேலோங்கிக் காணப் படுகின்றது. போகிற போக்கில் தோன்றுகிறபோது தோன்றுகிறவர்களுடன் இன்ப நுகர்ச்சியை நடத்தி முடித்துவிட்டு அதன் பின்விளைவு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் கட்டுப்பாடற்ற சுதந்திர வாழ்க்கை என்ற எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது.

இதனால் பள்ளிப் பருவத்திலேயே சின்னஞ் சிறுமிகள் பல முறை கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர், இதையும் மீறிப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. இத்தகைய விபரீத உறவு காரணமாகப் பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்புக்காக ஆண்டுக்கு 29மில்லியன் டாலர் தொகையை அமெரிக்க அரசு செலவிட்டு வருகின்றது.
பொருள் வளத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் மேம்பட்ட நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் குடும்ப அமைப்புச் சிதைந்து வரும் அதே வேளையில், விபச்சாரமும் வன்முறைக் கலாச்சாரமும் அதன் தீய விளைவுகளும் பெருகி வரக் காண்கிறோம்.

திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத் தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமேயன்றி வேறில்லை'' என்று மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற கம்யூனிசத் தலைவர்கள் ஒங்கி முழங்கினர். இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் ஈ.வெ.ரா. பெரியாரும் கொண்டிருந்தார்.
உலகம் போற்றும் இந்த மகான்கள்' எடுத்துரைத்த கருத்துக்கேற்ப மனிதர்கள் வாழத் தலைப்பட்டமையினால் மேனாடுகளில் குடும்ப அமைப்பு நசிந்துகொண்டே வருகிறது. இது மட்டுமின்றி, பெண்ணுரிமை பேசுவோராலும் இன்று புதிய ஆபத்துக்கள் புறப்பட்டு வருகின்றன.

பெண்ணுரிமை வேண்டும், பெண் விடுதலை வேண்டும் என முழங்குவோர் ஆங்காங்கே உலக அரங்குகளில் கூடிப் பேசுவதையும் கேட்க முடிகின்றது. கெய்ரோ, பெய்ஜிங் போன்ற இடங்களில் சமீப காலங்களில் பெண் விடுதலை மாநாடுகள் கூட்டப்பட்டன.

கருக்கலைப்புச் சுதந்திரம், செக்ஸ் சதந்திரம், ஆண் பெண் பாலியல் நட்புரிமை, மதுபானம் போன்ற போதைப் பொருள்களை நுகரும் சுதந்திரம் முதலியவை எங்களுக்கு வேண்டும். இத்தகைய எங்களது உரிமைகளில் தலையிடுகின்ற அதிகாரம் எவருக்கும் இருக்கக் கூடாது என்றெல்லாம் இந்த விடுதலை விரும்பிகள் கோஷங்களை முன் வைத்துள்ளனர்.

'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற மிருக வாழ்க்கைத் தரத்திற்கு மனிதன் தாழ்ந்து கொண்டிருப்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிரூபித்து நிற்கின்றன. குடும்ப அமைப்பின் சிதைவுக்கும் கலாச்சாரச் சீரழிவிற்கும் சில அரசுகள் கூடத் துணைபோயுள்ளன. ஒரினச் சேர்க்கை யாளர்கள் இணைந்து வாழ்வதும் குடும்பமே' என்று கூறுமளவுக்குச் சில மேனாடுகளில் அரசு அங்கீகாரங்கள் கூட வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எல்லாவகையான வழிகேடுகளுக்கும் வாசல் திறந்து விட்டு, குடும்பம் - சமூகம் என்னும் அமைப்புக்களைச் சீர்குலைய வைத்துவிட்டது மேனாட்டு நவ நாகரிகம். இப்போது இதனால் ஏற்பட்டுள்ள தீமைகளை மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளனர் இவர்கள்.

அரசாங்கமே மதுபானக் கடைகளையும் நடத்திக் கொண்டு குடியின் தீமையையும் பிரச்சாரம் செய்கிறதன்றோ? இதுபோல் எல்லாச் சமூகக் கேடுகளையும் அங்கீகரித்துவிட்டு, அவற்றினால் உருவாகும் தீமைகளுக்கு எதிராகவும் மேனாட்டினர் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
மிதமிஞ்சிய பொருள் வேட்கை, மிதமிஞ்சிய இன்ப நுகர்ச்சி இவைகளை மட்டுமே தலையாய நோக்கமாகக் கொண்ட மக்களால் குடும்பம் என்னும் அடிப்படை அமைப்பு சிதைந்து வருதல் கண்கூடு. இந்நிலை இப்படியே நீடிக்குமானால் வருங்காலத்தில் குடும்பம் என்னும் சமுதாயக் கட்டுமானம் இல்லாமலே போய்விடக்கூடும். குடும்ப அமைப்பு நின்று நிலைபெற்றிருந்தால் தான் வருங்காலச் சமுதாயம் உருப்படும் என்ற உண்மை இப்போதுதான் சிலருடைய புத்திக்கு உறைக்கத் தொடங்யிருக்கின்றது.

இதன் காரணமாக 1994-ஆம் ஆண்டினை சர்வதேசக் குடும்பநல ஆண்டு என உலகச் சுகாதார அமைப்பு அறிவிப்புச் செய்தது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் பதினைந்தாம் நாள் சர்வதேசக் குடும்ப நாள் என அனுஷ்டிக்கப்படுகிறது. குடும்ப அமைப்பில்தான் உலகின் வருங்காலம் தங்கியுள்ளது என்பது தான் இந்நாளில் எடுத்துரைக்கப் படுகின்ற கொள்கை முழக்க வாசகமாகும்.

குடும்பம் என்பது ஒரே கூரையினால் இணைக்கப்பட்ட இதயங்களின் இணைப்பேயாகும். அன்பு, பரிவு, பாசம், ஒருங்கிணைப்பு, பாதுகாப்புணர்வு, சகிப்புத் தன்மை முதலிய நல்லியல்புகளெல்லாம் குடும்ப அமைப்பிலிருந்தே பூத்துக் குலுங்கி, சமுதாய வாழ்விற்கு மணமூட்டுகின்றன. இத்தகைய நல்லியல்புகளின் உறைவிடமான குடும்ப இயல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

மனிதன் இயல்பிலேயே நூறுபேரோடு கூடிவாழும் இயல்பினையுடையவன். பொதுவாக எந்த மனிதனும் தனித்து வாழ்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இதுமட்டுமின்றி மனிதனுக்குப் பலவகையான தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளைத் தனி ஒருவராகவே யாராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் வாயிலாக மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த வகையில் மனிதனை, குடும்ப அமைப்பிலும் சமுதாயச் சசூழ் நிலையிலும் வாழ்வதற்கேற்ற வகையிலேயே இறைவன் படைத்துள்ளான்.

கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், உற்றார் உறவினர் ஆகிய பலதரப்பினரும் ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையே குடும்ப வாழ்க்கையாகும். குடும்பம் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வரையறையை வகுத்துக் கூறியுள்ளது.
குடும்ப அமைப்பு, மூவகை உறவுநிலைகளைக் கொண்டு இயங்குவதாக இஸ்லாம் இயம்புகின்றது. ஒன்று இரத்தக் கலப்பில் ஏற்படும் வம்சாவளி உறவு முறையாகும். மற்றொரு உறவுநிலை, திருமணத் தொடர்பினால் ஏற்படுவது, மூன்றாவது பால் குடியினால் ஏற்படுவது. இந்த மூன்று வகையிலுமல்லாத வேறு எந்த விதமான நிலையிலும் மனித உறவுகள் குடும்பமாக உருவாவதை இஸ்லாம் விரும்பவில்லை.

தத்தெடுத்துக் கொள்ளுதல், பரஸ்பர ஒப்பந்தங்களின் அடிப்படையில் அன்னியரைக் குடும்ப உறவுபோல ஆக்கிக் கொள்ளுதல், பாலுறவுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் நிக்காஹ்'' அல்லாத முறையில் சின்ன வீடு'' வைத்துக் கொள்ளுதல் முதலிய எதுவாயிருப்பினும் அவை இஸ்லாமியக் குடும்பக் கட்டுமானத்திற்குள் அடங்குவது கிடையாது.

மேலும் அவன் (அல்லாஹ்) தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு (இரத்தக் கலப்பின் அடிப்படையிலான) வம்சாவளியையும், (திருமண உறவின் அடிப்படையில்) சம்பந்தங்களையும் ஏற்படுத்துகின்றான்.
அல்குர்ஆன் 25:54


இருவகை இயல்பிலான குடும்ப உறவு பற்றித் திருமறை குர்ஆன் இங்ஙனம் எடுத்துரைத்துள்ளது.

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்,,, உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய் மார்களும். உங்கள் பால்குடிச்சகோதரர்களும்,,, ஆவர், அல்குர்ஆன் 4:23

பால்குடி உறவு பற்றி இவ்வாறு திருக்குர்ஆன் கூறுகின்றது, இரத்தபந்தம், திருமண உறவு. பால்குடி உறவு ஆகிய உறவுகளே உறுதியானவை, கட்டுக்குலையாதவை, குடும்பத் தொடர்பு அற்றுப்போகாமல் வழிவழித் தொடர்ந்து வருபவை.

இயற்கையோடு இயைந்ததும், தக்க முகாந்தி ரங்களோடு கூடியதும், ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக நின்று நிலவக் கூடியதும் இத்தகைய உறவு நிலைகளேயாகும். இவை அல்லாத ஏனைய தொடர்புகள் ஒரு மனிதனுடைய சோதனையான காலகட்டத்தில் காணாமல் போய்விடக்கூடியவை.

உடன் பிறவாச் சகோதரி ஏற்பாடுகளும், வளர்ப்பு மகன் போன்ற செயற்கைப்பந்தங்களும் அஸ்திவாரமில்லாத கட்டிடத்தைப் போன்று ஆட்டம் காணக்கூடியன. துன்பங்கள் சசூழும்போது இத்தகைய செயற்கை உறவுகள் சிலந்தி வலை போன்று இருக்குமிடம் தெரியாமல் சிதறி மறைந்து விடுகின்றன. ஆனால் வம்சாவளி, பால்குடி, திருமணத் தொடர்பானது இரும்புச்சங்கிலிபோல் சந்ததி தோறும் தொடர்ந்து உறுதி பெறுகிறது.
துன்பங்களும் துயரங்களும் நெருக்குகிறபோது ஒரு மனிதனை அரண் போலிருந்து காப்பாற்றுவது அவனுடைய குடும்பஅமைப்பேயாகும். நபிமார்கள் வாழ்க்கையிலும் இத்தகைய குடும்ப அரவணைப்பினைக் காணமுடிகின்றது. நபிமார்கள் ஏகத்துவத்தை எடுத்துரைத்தபோது குடும்பத்திலிருந்தே எதிர்ப்புகளும் கிளம்பின. குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பு கண்டு நபிமார்கள் கவலை அடைந்ததும் உண்டு.

நபி(ஸல்) அவர்கள் முதல் முதலாக இறைத்தூதினை எடுத்துரைத்து ஏகத்துவப் பிரச்சாரம் செய்தபோது அவர்களின் குடும்பத்தினர் சிலருடைய எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பினால் நபி(ஸல்) அவர்களுடைய ஏகத்துவப் பிரச்சாரம் எங்ஙனம் வலுவடைந்தது என்பதை அன்னாரின் வரலாறு தெரிவிக்கின்றது.

இறைவன் நபி(ஸல்) அவர்களைத் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் வாயிலாக ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கச் செய்தான். முதன் முதலாகத் தூதுச் செய்தியைப் பெற்றுக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். அப்போது நபிகளாருக்குப் பக்கத்துணையாயிருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்தி, அவர்களை உறுதிப்படுத்தியவர் அன்னை கதீஜா அவர்களேயாவார்.

வீட்டுக்கு உள்ளே நபி(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார் கதீஜா நாயகியின் அரவணைப்பு இருந்தது போல, சமுதாய அரங்கில் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு அரண்போன்ற பாதுகாப்பினை நல்கியவர் அபூதாலிபு ஆவார். இங்ஙனம் நபி(ஸல்) அவர்களின் துணைவியாரும் பெரிய தந்தையும் நபிகளாரின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு உற்ற துணையாயிருந்து ஆற்றிய பங்கு அளவிடற் கரியதாகும்.

அபூபக்கர்(ரலி) போன்ற ஆருயிர்த் தோழர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக உடல், பொருள், உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். என்றாலும் நபி(ஸல்) அவர்களின் 50ஆம் வயதில் அபூதாலிபும் கதீஜா நாயகியும் அடுத்தடுத்துக் காலமாகிவிட்டபோது, நபி(ஸல்) அவர்கள் ஆறாத்துயரில் ஆழ்ந்து போனார்கள். இந்த வம்சாவளி உறவையும் திருமண உறவையும் இழந்தபோது நபி(ஸல்) அவர்கள் இரு சிறகிழந்த பறவை போன்று கையற்று நின்று கவலைப்பட்டார்கள். துக்கம் மிகுந்த துயர் மிகு ஆண்டு (ஆமுல் ஹுஸ்ன்) என வரலாற்று ஆசிரியர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

ஓர் இலட்சியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இங்கே ஒரு படிப்பினை இருக்கிறது. . வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி காண்பதற்கு, குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் இருக்குமானால், ஒருவருக்கு அது போன்ற பேறு வேறு எதுவுமில்லை எனலாம். வெளியாரின் ஆதரவும் ஒத்தாசையும் எத்துணை அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் உண்டு உறையும் குடும்பத்துக்குள்ளே அவனுக்கு உடன்படாதவர்கள் இருப்பார்களானால், அதுவும் அவனுக்கு இன்னொரு பிரச்சனையாகி விடுகின்றது.. அதே வேளையில் முக்கியக் குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பு வாய்க்கப் பெறுமாயின் எவ்வளவு பெரிய புறஎதிர்ப்பையும் அவனால் சமாளித்துக் கொள்ள முடியும்.

நபி(ஸல்) அவர்களுடைய ஆரம்பகால ஏகத்துவப் பணிக்கு எத்தனையோ மாபெரும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. எனினும் நபிகளாரின் திருப்பணி மக்கத்து மண்ணில் மங்கிப் போகாமல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது. நபி(ஸல்)அவர்களுக்கு வாய்த்த குடும்ப அரவணைப்பும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். அதிலும் வேறு எவருடைய ஆதரவைக் காட்டிலும், வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியின் ஆதரவுக்குப் பிரத்தியேகமான மகிமை இருக்கவே செய்கிறது.. நபிகளாரின் வாழ்வே இதற்குச் சான்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு முதன்முதலாக ஓதுவீராக'' என்ற இறைச் செய்தி கிடைத்த போது அவர்கள் அஞ்சிப் பயந்து ஒடோடி வீட்டிற்கு வந்தார்கள். அருமைத் துணைவியார் கதீஜா நாயகியிடம், தமக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாக எடுத்துரைத்தார்கள். அப்போது கதீஜா நாயகி அவர்கள் ஒரு பொறுப்புள்ள இல்லத்தரசியாக எப்படி நடந்து கொணடார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இஸ்லாத்தின் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை ஓர் ஆண்மகன் எதிர்கொள்ளும்போது, அவனுடைய துணைவி அந்த வேளையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் அழகிய முன் மாதிரியாகும்.

நபி(ஸல்) அவர்கள் பேதலித்து நின்றபோது கதீஜா நாயகி அவர்கள், சாதாரணக் குடும்பங்களில் நடப்பது போன்று தம் கணவரைக் கேலி பேசவில்லை. அவநம்பிக்கை ஊட்டி அதைரியப் படுத்தவில்லை. மாறாக நபிகளாரைத் தேற்றினார்கள், தைரியப்படுத்தி உற்சாக மூட்டினார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான்; ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள்; சிரமப்படுவோரின் சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; உண்மையான சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி புரிகின்றீர்கள்;'' என்று கதீஜா நாயகி அவர்கள் நபிகளாரை ஆறுதல் படுத்தினார்கள். இப்படிப்பட்ட நற்குணத்தின் நாயகரான தங்களுக்கு எந்தக் கெடுதலும் நேர்ந்துவிடாது என எடுத்துரைத்துத் திடப்படுத்தினார்கள்.
சோதனையான காலகட்டங்களில் ஒரு குடும்பத்தலைவி கணவருக்குப் பக்கத்துணையாக இப்படித்தான் நடந்து கொள்ளுதல் வேண்டும். இந்தச் சம்பவம் திருக்குர்ஆனின் முதல் திருவசன வெளிப்பாட்டோடு தொடர்புடையதாகும். இறைத்தூதர் என்னும் அந்தஸ்தைப் பெற்றவுடன் நபிகளாரின் குடும்ப வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இச்சம்பவம் நல்லதொரு குடும்ப அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்தி நிற்கிறது.

ஆன்மீகத் துறைக்கு மட்டுமே மதங்கள் ஏற்றவை, லௌகீக வாழ்விற்கு மதங்கள் ஒத்துவருவதில்லை'' எனப் பலரும் பேசித்திரிகின்றனர். வேறு எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் இந்த அளவுகோல் பொருந்தக்கூடும். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஆன்மீகம் என்றும் லௌகீகம் என்றும் பாகுபாடு எதுவும் கிடையாது.

மனித வாழ்வின் ஆன்மீகம், லௌகீகம் உள்ளிட்ட தேவைகள் , என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை அனைத்தையும் உள்ளடக்கிய வாழ்வியல் நெறியே இஸ்லாமாகும். குடும்பம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் போன்ற லௌகீக வாழ்க்கை முறைகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வழிகாட்டுதல்களை வழங்கி யிருக்கின்றது.

இந்த லௌகீகத் தடங்களில் மனிதன் கால்பதித்து நடக்கும் போதுதான் அவனது ஆன்மீகத் தடாகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கும் என இயம்புகிறது இஸ்லாம். இந்த வகையில் ஒரு குடும்ப அமைப்பு எப்படி இருத்தல் வேண்டும் என்பதையும், திருக்குர்ஆனும் நபிவழியும் நமக்கு நன்கு உணர்த்திக் காட்டியுள்ளன.

மதம் என்பது தனி மனிதனோடு சம்பந்தப்பட்டது; குடும்ப வாழ்க்கையோடும், கூட்டு வாழ்க்கையோடும் மதத்தைச் சம்பந்தப்படுத்தக் கூடாது' என்ற மதச் சார்பின்மைப் பேச்சுக்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது. தனிமனித வாழ்க்கையில் எந்த அளவுக்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பின்பற்றப்படுகின்றனவோ, அந்த அளவுக்குக் குடும்பவாழ்விலும், கூட்டுவாழ்விலும் இறைச் சட்டத்தையும் நபிவழியையும் பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.

இஸ்லாத்தின் பல்வேறு கடமைகளைப் பார்ப்போமானால், அவை கூட்டாகச் செயல்படுத்துவதற்கென்றே விதிக்கப்பட்டதனைத் தெரியலாம். தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகள் மட்டுமின்றி இன்னபிற கட்டளைகள் கூட, குடும்ப அமைப்பிலும் சமுதாய அரங்கிலும் செயல்படத் தகுந்தனவாகவே காணக்கிடக்கின்றன.

இந்தப் பின்னணியில் நோக்கும் போது இஸ்லாம் குடும்பவியல் அடிப்படையிலான ஒரு மார்க்கமாகவே திகழ்கின்றது. குடும்பவியலின் ஆதாரசுருதியாக அமைந்திருப்பது திருமணமேயாகும்.

ஆண்டவனது அருளை அபரிமிதமாகப் பெற வேண்டுமானால், திருமண பந்தங்களையெல்லாம் மறந்துவிட்டு, துறவு வாழ்க்கையைத் தேடிக்கொள்ளுமாறு பல மதங்கள் கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் துறவறத்தைச் சிபாரிசு செய்யவில்லை. மாறாக இல்லற வாழ்க்கையை வலியுறுத்திப் பேசுகின்றது.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி மனிதர்கள் துறவுத்தனத்தைத் தாங்களாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்டனர். அதனை நாம் ஒருபோதும் அவர்களுக்குக் கடமையாக ஆக்கவில்லை. அப்படியிருந்தும், துறவு மேற்கொண்ட அவர்கள், அதனை எந்த அளவுக்குப் பேணி ஒழுக வேண்டுமோ அந்த அளவுக்கு அதனைப் பேணுவதும் இல்லை
(அல்குர்ஆன் 57:27) என்று இறைமறை இயம்புகின்றது.

அந்தக் காலத்து விசுவாமித்திர முனிவரிலிருந்து இந்தக் காலத்து பிரேமானந்தா முனிவர் வரை எத்தனையோ துறவிகள் இத் துறவறத்தை எந்த அளவுக்குக் கேலிக் குரியதாக ஆக்கியிருக்கின்றார்கள் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

துறவு வாழ்க்கை விதிக்கப்பட்டுள்ள கிறித்துவப் பாதிரிமார்கள், அவர்களுடைய நீண்ட, நெடிய வெள்ளை அங்கிகளுக்குள்ளே நடத்தும் களியாட்டலீலைகள் உலகறிந்த ரகசியங்களாகும்.

மனிதனுக்குப் பசி, தாகம் எழுவது எப்படியோ அதுபோலவே உடல்சுகமும், புலனின்பமும் இயல்பான ஒன்றாகும். இதனை வலிந்து அடக்குதலை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

உஸ்மான் பின் மழ்ன்(ரலி) என்று ஒரு நபித்தோழர் இருந்தார். இவர் நபி(ஸல்) அவர்களை அணுகி, குடும்ப வாழ்க்கையில் தாம் ஈடுபடாமல் துறவறம் மேற்கொள்ளப் போவதாகக் கூறி, அதற்கு அனுமதி கோரினார். நபி(ஸல்) அவர்கள் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், அவருக்கு அனுமதி வழங்கயிருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று ஸஃது பின் அபீ வக்காஸ்(ரலி) அறிவிக்கும் நபிமொழி புகாரி, முஸ்லிம், அஹ்மத் நூல்களில் இடம் பெற்றள்ளது.
அனஸ்(ரலி) வாயிலாகத் தெரியவரும் பின்வரும் நபிமொழியும் புகாரி, முஸ்லிம், அஹ்மத் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும் மேலும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக்கொண்டனர். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது; நான் நோன்பும் வைக்கிறேன், அதைவிட்டு விடவும் செய்கிறேன்; நான் தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.

முக்கிய வழிபாட்டுக் கடமைகளான நோன்பிற்கும் தொழுகைக்கும் இஸ்லாம் எந்த இடத்தை வழங்கியுள்ளதோ, அதே இடத்தை மணவாழ்க்கைக்கும் தந்து நிற்கின்றது இந்த நபிமொழி.

நான் உண்ணமால் நோன்பிருக்கிறேன், உண்ணவும் செய்கிறேன்: உறங்காமல் விழித்திருக்கிறேன்: உறங்கவும் செய்கிறேன்' என்ற கூற்றிலிருந்து உணவும் உறக்கமும் ஒரு மனிதனுக்கு எப்படி இன்றியமையாது தேவைப் படுகின்றனவோ அது போலவே மணவாழ்வும் மனிதனுக்கு ஒரு அவசியத் தேவையாகும் என்பதையும் இந்த நபிமொழி நன்கு உணர்த்துகின்றது.
அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் இரவு முழுவதும் தொழுவதாகக் கேள்விப் பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள். நீ உனது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு என்று உணர்த்திக் காட்டினார்கள்.

இந்தக் கருத்துப்பட அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ நூல்களில் இடம் பெற்றள்ளது.

அடியான் என்ற வகையில் ஆண்டவனுக்கு வழிபாடுகளைச் செலுத்துவதோடு, கணவன் என்ற வகையில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புக்களையும் ஒரு மனிதன் செவ்வனே நிறைவேற்றியாக வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதனை வற்புறுத்திக் கூறியுள்ளமை, இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மேற்கூறிய நபிமொழிகள் ஒரு முக்கியமான செய்தியை நமக்கு உணர்த்திக் காட்டியுள்ளன. மனிதனுக்குப் பசி, தாகம், உறக்கம் எப்படியோ அதுபோலவே உடல் சுகமும் புலனின்பமும் இயல்பான ஒன்றாகும். ஒரு பாலினர் மற்றொரு பாலினரிடம் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பு உயிரியல் இயற்கைக்கு உட்பட்டது. பிற உணர்வுகள் அனைத்தையும் விடவும் மனிதனிடம் மேலோங்கித் திகழக்கூடியது இதுவாகும். இந்த உணர்வு மனிதனுடைய ஐம்புலன்களுக்கும் ஒருங்கே இன்பமளித்து, அவனது எண்ணம், சொல், செயல்களையெல்லாம் இனிமைப் படுத்துகின்றது.

மனிதனுடைய மகிழ்ச்சி, துக்கம், போன்ற பிற உணர்வுகளையெல்லாம் ஆட்டிப்படைக்கின்ற அளவுக்கு ஒரு வலுவான ஆற்றலாக இப்பாலுணர்வுச் சங்கதி புதைந்து கிடக்கின்றது. இந்த உணர்வு நிறைவேறும்போது மனிதன் மகிழ்கிறான், சாந்தமடைகிறான். அவனுடைய பிற செயல்பாடுகள் சீரடைகின்றன. இந்த உணர்வு நிறைவேறாத நிராசையாகும்போது மனிதன் கோபம் கொள்கிறான். ஆவேசப்படுகிறான். அவனுடைய பிற இயக்கங்களை இது மிகவும் பாதிக்கின்றது. இதன் காரணமாகவே வரலாற்றில் பல சாம்ராஜ்ஜியங்கள் சரிந்திருக்கின்றன. போர்க்களப் பேரழிவுகள் தொடங்கி, இக்காலத்துக் குத்து வெட்டுக் கொலைகள் வரை பலவற்றிலும் இந்த உணர்வு முக்கிய இடம் வகிப்பதைக் காண்கின்றோம்.

சொல்லப்போனால், படைப்பினங்களின் மணி முடியாகத் திகழும் மனிதனுக்கு இறைவன் அருளியிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளுள் இந்தப் பாலுணர்வும் ஒன்றாகும். மனிதன் பருவமெய்தியதிலிருந்து அவன் முதுமையடைந்து மரணிப்பது வரை இப்பாலுணர்வு ஏதோ ஒரு ரூபத்தில் அவனிடம் பொருந்தியே இருக்கின்றது. ஏனைய உயிரினங்களுக்குப் பாலுணர்வு உண்டு என்றாலும் அவை இவ்வுணர்வினை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவது கிடையாது. ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே பயன்படுத்தி விட்டு ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதனுடைய பாலுணர்வு இயக்கமோ ஆண்டு முழுவதும் எல்லாப் பருவகாலங்களிலும் செயல்படுத்தத் தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

ஆக, இப்பாலுணர்வு என்பது மனிதனுடைய பிறப்போடு ஒட்டியது. மக்கள் பிறப்பை அருளுவதும் எங்கும் பரந்து நிற்பதும் இதுவாகும், ஆண்டவனது படைப்புகக்களில் ஆண்,பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும், அவற்றின் வாழ்வுக்கும் வளத்துக்கும் சத்தாகவும் இது அமைந்திருக்கின்றது.

ஆண்மையும் பெண்மையும் ஒன்றில் ஒன்று ஈர்க்கப்படும் இப்பாலுணர்வு இல்லையேல் மனித இனமும் இனப்பெருக்கமும் நில்லாது நிலையாது போயிருக்கும். இனப்பெருக்கத்தின் முன்னோடியாகத் திகழும் இப்பாலுணர்வுக்குத் திருமணம்' என ஒரு நெறியமைத்து அதற்குச் சில ஒழுங்கு முறைகளை விதித்துள்ளது இஸ்லாம், குடும்ப இயலின் நுழைவாயிலான இத்திருமணம் மனிதனுடைய செயல்பாடுகளில் சிறப்பான ஒரு இடத்தை வகிக்கின்றது, எனவே இஸ்லாம் இதுபற்றிச் சிறப்பாகப் பேசியுள்ளது.

நன்றி: தமிழ் இஸ்லாம்.காம்

15 October 2005

ஹிஜாப் பற்றி PJ - பாகம் 2

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.


பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு அவ்வாதம் வலுவானதன்று.


ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.


இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. அனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.


அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.


ஹிஜாபைக் குறை கூறுவோர் அதைச் சிந்திப்பதில்லை.


பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். "இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்'' என்றெல்லாம் கூறுகின்றனர்.


ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.


பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது?


பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா? பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் என்?


பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும்போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?


பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.


இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.
பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத்தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானதுதான். அதைவிட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் அந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.


ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக்குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.


ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்டவேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபட கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். அதனால்தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக்கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் ஆடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக்கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பதுதான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

14 October 2005

ஹிஜாப் பற்றி PJ - பாகம் 1

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் அது "ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
"ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!'' என்று முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் அந்தப் போலித்தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
"ஹிஜாப்" என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இதுபற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம்

ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். அனால் சமத்துவம் பேசும் இவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். இதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை எதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் அந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை எதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் அவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் அந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள் அவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட அந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. என் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே அதை அனுமதிக்க மாட்டார்கள்.
"ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்'' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஒரளவுக்கு அவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு யாருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு

இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு அதுதான்.
பெண்களின் ரசனை அத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. அதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

13 October 2005

ஆடைகளைக் களைவதா சுதந்திரம்?

வெகு வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தனது அடக்குமுறையை முஸ்லிம்கள் மீது கையாளும் மேற்கத்திய அரசின் கலாச்சாரத்தை எதிர்த்து 15 வயதுள்ள ஷபீனா பேகம் எனும் லண்டன் பள்ளியின் முஸ்லிம் மாணவி தொடுத்த வழக்கில் வெற்றி அடைந்துள்ளார்.

Shabeena Begum

ஷபீனா பேகம்

கைகள் மற்றும் முகம் தவிர மற்ற உறுப்புகளை மறைக்கும் "ஹிஜாப்" உடை அணிந்து ஷபீனா பேகம் பள்ளிக்கு வந்ததை பள்ளி நிர்வாகம் கண்டித்ததை அடுத்து, இந்த வழக்கு பள்ளி நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்டது.

பெண்களுக்கு "முழு" சுதந்திரம் வழங்குகிறோம் என மார்தட்டும் பிரிட்டனில் ஒரு பெண், தன் இஷ்டத்திற்கு துணி அணிவதற்கு போராட வேண்டியுள்ளது எனில், மேற்கத்திய பாஷையில் சுதந்திரம் என்பது ஆடைகளைக் களைவது மட்டும் தானா?

கடந்த மார்ச் 2 - ந்தேதி 2005 அன்று வெளியான இத்தீர்ப்பு, தலையை மறைத்து பெண்கள் வெளியே வருவதை சட்டப் பூர்வமாக சென்ற வருடம் தடை செய்த ஃப்ரெஞ்சு அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி என்றால் அது மிகையில்லை.

இதன் மூலம் ஒரே சமயத்தில் பிரிட்டனில் வசிக்கும் 16 இலட்சம் முஸ்லிம்களுக்கு, "இறை நம்பிக்கையில் உறுதியுடன் இருந்தால் இஸ்லாமிய கோட்பாடுகளைப் பின்பற்ற எவரும் தடை விதிக்க இயலாது" என்பதையும் "கிடைக்காத உரிமையை, போராடினால் எவரும் பெற்றுக் கொள்ள முடியும்" என்ற அரிய பாடத்தையும் கற்பித்துள்ளார்.

30 September 2005

அண்ணா பல்கலைக்கழகத்தின் உடை கட்டுப்பாடு


கல்லூரிக்கு வரும் பெண்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ், குட்டைப்பாவாடைப் போன்ற உடைகளை உடுத்தி வரக் கூடாது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கட்டுப்பாடு விதித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!

பெண்ணுரிமை என்றால் என்னவென்றே விளங்கிக் கொள்ள சக்தியில்லாதவர்கள் வழக்கம் போல தங்கள் வார்த்தை ஜாலங்களால் துணைவேந்தர் உட்பட அந்தக் கருத்தில் இருப்பவர்களை சாடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய கருத்துக்கு இஸ்லாமிய சாயம் கூட பூசப்பட்டது.


மத நம்பிக்கையை ஒருபக்கம் ஒதுக்கி விட்டு இந்த பிரச்சனையை யோசிப்போம். ஒரு பல்கலை கழகத்தின் துணைவேந்தர் 'பெண்கள் ஆடை விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை ஏன் வெளியிட வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

உயர்கல்வியும் அது போதிக்கப்படும் வளாகமும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் - துணிவையும் - சிந்தனைத் தெளிவையும் ஏற்படுத்தும் இடமாகும். அத்தகைய இடத்திலிருந்து மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் ஒரு கல்வியாளர் இத்தகைய கருத்தை முன் வைக்கிறார் என்றால் கல்வி ஏற்படுத்த வேண்டிய மாற்றத்திற்கும் மாணவியர் உடுத்தும் உடைக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகின்றது. சில மாணவியர் தங்கள் தன்நம்பிக்கைக்கு உடையையே அடையாளமாக்கும் போக்கை கையாள்கிறார்கள். இந்த போக்கை அவர்கள் தங்கள் கல்வி மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பெறுவதை விட 'அழகித் தேர்வு' என்ற பாலியல் நுகர்வு இடங்களிலிருந்தே பெறுகிறார்கள்.

உடம்பின் முக்கால் பாகம் தெரியக் கூடிய அளவிற்கு துண்டு உடையுடன் அழகிப்போட்டிக்கான மேடைகளில் வளைந்து, நெளிந்து நடந்து தங்கள் சதை பிடிப்புகளுக்கு சர்ட்டிஃபிகேட் வாங்கும் சில வியாபார பெண்கள் 'வெற்றிவாகை? சூடியவுடன் முதலில் பேசுவது தனது 'தன்னம்பிக்கை'யைப் பற்றிதான். 'நாங்கள் 'சாதிக்க முடியும்' என்ற தன்னம்பிக்கை மூலதனமாகக் கொண்டே வெற்றிப் பெற்றுள்ளோம்' என்று வாய் கூசாமல் கூறுவார்கள். அந்த செக்ஸ் வியாபார குறியீடுகளின் உடம்பில் பார்வையை மேயவிடும் வக்கிரம் மிக்க நடுவர் கூட்டம் இந்த தன்னம்பிக்கையை ஆஹா.. ஓஹோ.. என்று பாராட்டி மார்க் போடும்.

சென்சார் தடைகளின்றி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் இத்தகைய போட்டிகளும், கருத்துக்களும் கல்லூரி மாணவிகளை வெகுவாக பாதிக்கின்றது. அதனுடைய பிரதிபளிப்புதான் இத்தகைய ஆடைக் குறைப்பு கலாச்சாரமாகும்.

கல்வி முறைக்கும், தற்போது ஏற்பட்டு வரும் கலாச்சார மாற்றங்களுக்கும் மத்தியில் பெரிய வேறுபாடு இருப்பதை தெளிவாக உணரும் தருணம் இது.

கல்வி ஏற்படுத்த வேண்டிய சமூக மாற்றங்களை விட இத்தகைய மீடியாக்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பெண்ணிய மாற்றங்களே இன்றைக்கு நாம் எதிர்கொள்ள வேண்டிய பெரும் சவாலாக இருந்துக் கொண்டிருக்கிறது.

குறை உடைகளுடன் காட்சியளிக்கும் மாணவிகளிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகள் சில உண்டு.இந்த குறை உடைகளின் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

தேவையான அளவு உடை உடுத்தி இருக்கும்போதே ஆண்களுக்கு பெண்கள் பெரும் சவாலாக அமைகிறார்கள் என்றால் இந்த குறை உடைகளால் ஆணை தவறான வழிகளுக்கு கூடுதலாக தூண்டுவதில் உங்களுக்கு என்ன வெற்றி கிடைக்கப்போகிறது? தொடை - மார்புப் பகுதிகள் - முதுகு என்று முக்கியமாக மறைக்க வேண்டிய பல பகுதிகளை திறந்து பள்ளிக்கு செல்கிறீர்களே, உடன் படிக்கும் மாணவர்கள் பிற பள்ளி, கல்லூரி மாணவர்கள் உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கும் போது எப்படி கல்வியில் முன்னேறுவார்கள்? ரேகிங், ரேப்பிங், ஈவ்டீஸிங் போன்ற பெண் விரோத கொடுமைகள் நடப்பதற்கு பாலியலைத் தூண்டும் உங்கள் உடைகள் முக்கிய காரணமாவதை உங்கள் அறிவு ஒத்துக்கொள்ள மறுப்பதேன்?

'அரை குறை உடைகள் தான் சுதந்திரம், இப்படி உடை உடுத்தினால் தான் சாதிக்க முடியும்' என்று நீங்கள் கருதினால் முழு அளவு உடை உடுத்தி சாதிக்கும் பெண்களையும், குறை உடைகளை அறவே உடுத்தாமல் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் ஆண்களையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது? நீங்கள் திறந்து வைத்திருக்கும் பகுதிகள் கவர்ச்சிப் பகுதிகள் அல்ல என்று சொல்ல வருகிறீர்களா..?

நீங்கள் கற்கும் கல்வியில் எந்தப் பாடம் இத்தகைய உடைகளை 'சுதந்திரம்' என்று கூறி உங்களை ஊக்குவிக்கிறது?. இந்தக் கேள்விகளுக்கு 'சுதந்திரம்' பேசும் மாணவிகள் பதில் சொல்ல வேண்டும்.

துணைவேந்தரின் அறிவிப்புப் பற்றியும் மாணவிகள் அணியும் இத்தகைய உடைகள் பற்றியும் சில பெண்களின் கருத்தை 'தினமணி'யிலிருந்து கொடுக்கிறோம்.

கவர்ச்சி உடையணிந்து கலாசாரத்தைக் கெடுக்கும் கல்லூரி மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியே! பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் மாற்றுவது மாடர்ன் டிரஸ். ஆடை குறைப்போடு கூடிய மாடர்ன் டிரஸ், வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தை சீர்கெடச் செய்துவிடும். - கவிஞர் அருணா ராஜேந்திரன், கூத்தூர்.

மாடர்ன் டிரஸ் அணிவது நாகரிகமாய் இருந்தாலும் தமிழருடைய பண்பாடு கெடுகிறது. இது கலாசாரத்தை இழிவுபடுத்துவதற்கு சமம். இதைத் தடை செய்வது ஈவ்-டீஸிங்கை தடுக்கும். ஆகவே மாடர்ன் டிரஸ் அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியானதாகும். - கே.பிரேமா வி.கே.புரம்

மாடர்ன் டிரஸ் அணிவது, கல்லூரி இளைஞர்களிடையே ஈவ்-டீஸிங் செய்ய தூண்டுகோலாக அமையும். புடவை கட்டிக்கொண்டு சென்றால் அவ்வளவாக ஈவ்-டீஸிங் இருப்பதில்லை. எனவே கல்லூரிகளில் மாடர்ன் டிரஸ்க்கு தடை விதித்தது சரியே. - சி.எஸ். பத்மாவதி. குடியாத்தம்

ஆடைகள் என்பது மனித சமுதாயத்துக்கு மதிப்பு, மரியாதை தரவேண்டும். எனவே கண்ணியமாக உடை உடுத்துவது அவசியமாகும். ஆடை அணிய வேண்டிய முறை குறித்து குர்ஆனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாணவிகளுக்கும் பொருந்தும். - சல்மா பேகம், சிங்கபெருமாள் கோவில்

மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் அருவருக்கத்தக்க உடைகள் அணிவதைத் தடை செய்ய வேண்டும். மாணவிகளுக்கு தடை விதித்திருப்பதைப் போல, மாணவர்களும் அநாகரிகமாக உடை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும். இதைச் செயல்படுத்துவது பெற்றோர்களின் முதல் கடமை. - யூசிமா, தென்கரை பெரியகுளம்

கல்லூரி மாணவிகள் மாடர்ன் டிரஸ் அணிவது தவறல்ல; மாடர்ன் டிரஸ் என்ற பெயரில், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அரைகுறை ஆடைகளுடன் வளைய வருவதுதான் தவறு. ஆடை என்பது பண்பாட்டையும், கலாசாரத்தையும் உணர்த்துவது. அதற்காக ஒன்பது கஜ புடவைகளை சுற்றிக்கொண்டு வர வேண்டியதில்லை. அணியும் ஆடை ஒருவருக்கு கம்பீரத்தையும், மனதில் மரியாதையையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். - கு.பெருந்தேவி, சென்னை

உடலை மறைப்பதற்காகத்தான் உடை உடுத்துகிறோம். உடல் வெளியில் தெரியும்படி பெண்கள் உடை அணிவதால், ஆண்கள் தவறு செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது. உள்ளத்திலிருந்து வரவேண்டிய காதல், உடல் கவர்ச்சியிலிருந்து வருகிறது. முன்பெல்லாம் தவறு ஏற்படுவது அபூர்வமாக இருந்தது. இப்போது நடக்கும் தவறுகளுக்கு பெண்கள் அணியும் உடையே முக்கிய காரணமாக உள்ளது. சேலை கட்டுவதுதான் சிறந்தது, பண்பாடும் கூட. - வி.வேலாமுத முத்தம்மாள், காந்தி சேவா சங்கம், சத்திரப்பட்டி

கல்லூரிகளில் மாடர்ன் டிரஸ் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பது சரியானதுதான். மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் ஆபாசமாக உடை அணிகின்றனர். இந்த உடையுடனே பொது இடங்களுக்கும் வருகின்றனர். ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு இது சமம். ஸ்லீவ்லெஸ் மேலாடையும், டைட் ஜீன்ஸம் ஆண்களை படுத்துவது நிஜம். - விஜயஸ்ரீ இராஜேந்திரன், மொரட்டுப்பாளையம்

நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. கல்லூரிக்குச் செல்வது படிப்பதற்காகத்தான். ஆடை அலங்காரத்தை ரசிப்பதற்காக அல்ல. சினிமா மோகத்தால், திசை மாறி நடைமுறைக்கு ஒத்துவராத ஆடைகளை அணிய தடை விதிப்பது தவறில்லை. பள்ளிகள் போன்று சீருடை கூட அறிமுகப்படுத்தலாம். நமது கலாசாரத்தை கட்டிக்காக்க இது உதவும். - ச.ஜெயஸ்ரீ, நங்கநல்லூர்

உடைக்கட்டுப்பாட்டை வரவேற்க்கும் மாணவர்களும், பெற்றோரும்



நன்றி: இதுதான்இஸ்லாம்.காம்

15 September 2005

பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா?

பெண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை

இஸ்லாம் என்பது மனிதகுலம் முழுமைக்கும் இறைவனால் இறக்கிவைக்கப்பட்டது. விருப்பு, வெறுப்புக்கு அப்பற்பட்டது. ''அப்படிதானேயொழிய இப்படியும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது முழுமையாக்கப்பட்டுவிட்டது. வாதப்பிரதி வாதங்களுக்கு அப்பாற்பட்டது. ஆகையால், பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதோ இல்லையோ ஆணையிடப்பட்டுவிட்டது. அணிந்தே தீர வேண்டியது கடமை. இருப்பினும் ஏக இறைவன் இந்த பர்தா பெண்களுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றது என்று கூறுகின்றான்.

நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளான பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானையை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும். அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 33:59)

இந்த வசனம் ஒன்றே கட்டுரையின் தலைப்பிற்கு அதிக வலு சேர்க்ககூடியதாக உள்ளது. மேலும் இறைவன் பர்தாவைப்பற்றி கூறும்போது,
மேலும் (நபியே!) பிசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிபாதுகாத்துக் கொள்ளவும்: அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளைதம் மேல்சட்டைகளில் மீது போட்டு(தலை,கழுத்து,நெஞ்சு, ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்.... அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவதற்காக, தங்களுடைய கால்கள் பூமியில் தட்டி நடக்க வேண்டாம். (அல்குர்ஆன் 24:31)

....மேலும் (நபியுடைய மனைவியராகிய) அவர்களிடம் யாதொரு பொருளைக் கேட்க நேரிட்டால், நீங்கள் திரைக்கு அப்பால் இருந்துக் கொண்டே அவர்களிடம் கேளுங்கள். அவ்வாறு செய்வது உங்கள் உள்ளங்களுக்கும் அவர்கள் உள்ளங்களுக்கும் மிகப் பரிசுத்தமானதாகும். (அல்குர்ஆன் 33:53)
மேற்காணும் வசனங்களில் ஏக இறைவன் கூறும் போது பெண்கள் பர்தாவை கண்டிப்பாகப் பேணவேண்டும் என்பதைக் கூறி அதனால் நீங்கள் (பெண்கள்) கண்ணியமானவர்களாகக் கருதப்படுவீர்கள் என்றும் கூறுகின்றான். ஆக பெண்களை சுதந்திரமானவர்களாக இருக்கும் பொருட்டே பர்தாவை இறைவன் கட்டாயப்படுத்தியுள்ளான்.

எவ்வாறு ஹிஜாப் இருக்கவேண்டும்?

ஹிஜாபை இறைவன் கடமையாக்கியதற்க்கு முதல் காரணம் தீய பார்வையை, எண்ணத்தை, நடவடிக்கையை தடுக்கக் கூடியதாக உள்ளது.
இரண்டாவது, பெண்கள் சுதந்திரமாக தங்களுடைய தேவையை பூர்த்திசெய்துக் கொள்ளவும் இந்த பர்தா ஏதுவாக அமைந்துள்ளது.

முக்கியமாக இந்த பர்தாவையே அலங்காரமாகவும் அணியக்கூடாது. மேலும் இந்த பர்தாவை நபி(ஸல்) அவர்களின் மனைவியரும், சஹாபியப் பெண்களும் எவ்வாறு அணிந்து வந்தனர் என்பதை இனி பார்ப்போம்.

"நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இஹ்ராமுடைய சமயத்தில் இருக்கும் போது, குதிரை வீரர்கள் எங்களைக்கடந்து செல்லும் போது நாங்கள் எங்கள் தலையிலிருக்கும் துணியை முகத்தின் மீது இழுத்து மூடிக்கொள்வோம். அவர்கள் கடந்து சென்றதும் நாங்கள் (முகத்திரையை) விலக்கிக் கொள்வோம்" அறிவிப்பவர்: அயிஷா(ரலி) - ஆதாரம்: அபூதாவூத் 1833
"நாங்கள் ஆண்களுக்கு முன்னால் முகத்தை மூடுபவர்களாக இருக்கிறோம்". அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி), ஆதாரம்: இப்னு குஸைமா, ஹாகிம்.

இவை நபி(ஸல்) அவர்களால் கூறப்படாவிட்டாலும் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையிலும், அவர்களின் காலக்கட்டத்திலும் நடந்தேறியுள்ளது. இதை நபியவர்கள் தடுக்கவில்லை. இருப்பினும் சில ஹதீஸ்களில் பெண்கள் முகத்தை மூடாமலும் இருந்துள்ளனர். உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்து இந்த கறுப்பு நிற பெண்மணி பொறுமையின் காரணத்தால் இவர் சுவனவாசி என்றுள்ளார்கள்.
ஆகவே இவற்றைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டால் எந்த பிரச்சினையும் வராது என்று கூறிவிடமுடியாது. அது அவளின் நடவடிக்கையை பொறுத்தேயுள்ளது. ஆண்கள் நம்மை கவனிக்கிறார்கள் அதனால் ஏதும் தீங்கு விளையும் என்று எண்ணினால் முகத்தை மறைக்கலாம்.

பர்தா இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்:

ஏக இறைவன் பெண்களை வசீகரமானவளாக படைத்துள்ளதாக (அல்குர்ஆன் 3:14) இவ்வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

பெண்கள் தங்கள் அழகை பர்தாவைக்கொண்டு மறைக்க வேண்டுமென்று ஏற்கனவே நாம் பார்த்தோம். காரணம் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள் என்று, மேற்கூறப்பட்ட பெண் பர்தாவைக் கொண்டு தன்னை மறைக்காவிட்டால்! தவறான செயல்கள் (ஈம்மொரல் ஆcடிவிடிஎச்) செய்வதற்கு தூண்டுகோளாய் அமைந்துவிடும். அதனால் தான் இன்று பரவலாக காணப்படும் ஏவெ Tஎஅசிங் (பெண்களை கேலி செய்வது) கற்பழிப்பு, கொலை, கொள்ளை இதுப்போன்ற பல இன்னல்களுக்கு பெண் அலைக்கழிக்கப்படுவாள்.

இன்று நாகரீகத்தின் உச்சியில், சுதந்திரத்தின் உரிமையாளர்கள், பொருளாதாரத்தின் சூத்திரதாரிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் மேற்கத்திய நாகரீகங்களில் காண்பதென்ன? பர்தா இல்லாமல் போனதாலே அரைகுறை ஆடையணிந்து உலாவரும் மாதுக்கள், நகரின் அழகான புல்வெளி பூஞ்சோலைகளிலே போவோர் வருவோர் காணும் வண்ணம் தம் காமக் களியாட்டங்களை வெட்கமின்றி நிறைவேற்றும் கூட்டங்கள். தந்தை மகளையும், தாய் மகனையும். அண்ணன் தங்கையையும் அறிய முடியாத குடும்ப பாங்கு. விலங்கை விட கேவலமாக களியாட்டங்கள் நிறைவேறுகின்றன. பர்தா இருந்திருந்தால் இந்நிலை தோன்றுமா? பெரும் போர்களுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் வித்திடும் பெண் கவர்ச்சியை மூடி மறைத்தால்தான் இப்பூமி அழகானதாக இருக்கும்.

இன்று அமெரிக்காவில், ஐரோப்பாவில் காண்பதென்ன?
1) திருமணத்துக்கு முன்பு செக்ஸ்,
2) திருமணத்திற்க்கு அப்பாற்பட்ட செக்ஸ்,
3) கணவரிடம் தன் பாய் ஃபிரண்டை அறிமுகப்படுத்தும் அவலம். மற்றும் பிற....

இதுவே, பர்தா முறையை அமல்படுத்தும் இஸ்லாமியர்கள் மத்தியில்.
1) சீரான குடும்ப அமைப்பு,
2) இனம் காணும் உறவுகள்,
3) திட்டமிட்ட திருமணங்கள்,
4) குற்றங்களின் குறைவுகள்,
5) பொருளாதார சீரழிவுகள் இல்லாமை,
6) அரசாங்கங்களின் காவல்துறைக்கு பணிக் குறைவு. மற்றும் இன்னும்பிற
பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என்று வாழ்ந்து காட்டியவர்கள்:

இக்கட்டுரையை படிக்கக்கூடிய ஒவ்வொரு பெண்மணியும் பர்தாவை பேணக்கூடியவர்களே! இன்ஷா அல்லாஹ். நமக்கு எந்த விதத்திலும் பர்தா பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சுதந்திரத்தை பறிக்கவுமில்லை. நபி(ஸல்) அவர்கள் காலம் முதல் இந்தக்காலம் வரைஇஸ்லாத்தை முழுமையாக ஏற்ற ஒவ்வொரு பெண்ணும் பர்தாவை அணியக்கூடியவர்களே! இருப்பினும் இன்றைய காலக்கட்டத்தில் பிரபலமாக திகழும் முஸ்லிம் பெண்கள் பர்தாவைப்பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை இனிபார்ப்போம்.

கமலா சுரய்யா:
இவருடைய வாழ்க்கை இஸ்லாத்தை தழுவதற்கு முன்பு காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு கொண்டு ஓடியது. உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்று சொன்னால் உலகத்தில் அழகு எங்கு உள்ளது என்று சொன்னால் இளமையான பெண்களின் நிர்வாணத்தில் உள்ளது என்று பறைசாற்றி அப்படிப்பட்ட ஒவியத்தையும் வரைந்து விற்பனையும் செய்தார்.
இப்படியாக இருந்த அவர்களுடைய வாழ்க்கையில் 'இஸ்லாம்' எனும் ஜீவ நதி பாய்ந்தது. அவர் ஹிஜாப் அணிந்தார். இஸ்லாமானது அவர்களுடைய வாழ்க்கையை முழுமையாக மாற்றியது. இவர் இஸ்லாத்தை தழுவிய போது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இச்சமயத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சுரைய்யா கொடுத்த பதில் என்ன என்பதைப் பார்ப்போம்!

கேள்வி: இஸ்லாத்தில் உங்களை கவர்ந்தது எது?
சுரைய்யாவின் பதில்: நான் முதலில் இஸ்லாத்தில் விரும்புவது, பெண்கள் அணியும் ஹிஜாப் முறையைத்தான். ஏனெனில் அது கண்ணியத்தை தருகிறது. என் வாழ்வில் ஒழுக்கத்தை தந்து நேரான பாதைக்கு வழிவகுக்கிறது என்று பதில் கூறி இனி என்னுடைய இஸ்லாமிய பணியை நான் இந்த ஹிஜாபுடன் துவங்குவேன் என்று கூறி முடித்தார்.
மேலும் தற்போது சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் (ஆதென்ச்௨004-ஓலிம்பிc Gஅமெச்) போட்டியில், ஈரான் நாட்டு பெண்மணி துப்பாக்கி சுடும் போட்டியில் ஹிஜாபுடன் பங்கேற்றார். அதுமட்டுமல்ல இன்று பல பிரபலமான பெண்கள் இஸ்லாத்தினுடைய பல விஷயங்களில் ஈர்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்கின்றனர். இதில் ஹிஜாபின் அவசியத்தையும், பயனையும் அறிந்து அதனால் இஸ்லாத்தை ஏற்றவர்களும் இதில் அடங்குவர்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்ன வென்றால் பர்தா அணிந்தும் சில விஷயங்களை பெண்களுக்கு இஸ்லாம் தடுக்கின்றது அவற்றில் இரண்டு விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

1) அவள் ஒரு தொழில் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஆண்களுடன் கலந்து இருக்கக் கூடாது. காரணம்: பாலியல் ரீதியாகவும், மன பீதியாகவும். பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.

2) அரசியல் கூடாது காரணம்: அவளின் உடற்கூறு (மாதவிடாய், கர்ப்பம்...) போன்ற காரணங்களால் சமுதாயத்தின் மேல் உள்ள கவனம் சிதறுமாதலால் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியாது. ஆக இவைகளில் ஈடுபடுவதுதான் சுதந்திரம் என்று கூற முடியாது. எனவே இஸ்லாம் பர்தாவின் விஷயத்தில் சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை.

பர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்:
பர்தா என்பது ஒரு அடிமைத்தனதான ஆடை, பிற்போக்குதனமான ஆடை, பர்தா அணிந்த பெண்கள் தீவிரவாதிகள், பெண்களின் சுதந்திரத்தை முழுமையாக பறிக்கக்கூடிய ஆடை என்று பல்வேறு துவேஷங்களுக்கு உள்ளான இந்த பர்தா முறையை, இன்று உலகில் பல பெண்கள் அதன் அவசியத்தையும், பயனையும் அறியக்கூடியவர்களாக இருகின்றனர். அதனை உணரவும் செய்கின்றனர். இன்று பல மேற்கத்திய நாடுகளை நாம் பார்க்கும்போது கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைகின்றனர். இதனை "The Almanac book of facts"" என்ற புத்தகத்தில் உலக மக்கள் தொகையில் கடந்த 10 வருடங்களில் இஸ்லாம் 137% கிறிஸ்தவம் 46% இதில் பெண்கள் மட்டுமே இவ்வளவு சதவீதத்தில் இஸ்லாத்தில் இணைகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அல்ஹம்து லில்லாஹ். தற்போது அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 1,00,000 மக்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர் என்றும். இதில் பெண்கள் 4 என்றால் ஆண்கள் 1 என்ற நிலையில் இஸ்லாத்தை தழுவுகின்றனரே ஏன்? ஏன்? என்ன காரணம்? புரியவில்லையா? அது தான் இஸ்லாம் காட்டும் அழகிய வாழ்க்கை நெறிமுறை எவராலும் மாற்றமுடியாத சட்டங்கள் என்றும், பலவாராக இஸ்லாம் மக்களால் கவரப்படுகின்றது.

பெண்களை பொறுத்தவரை இஸ்லாமானது அவர்களுக்கு அளிக்கக்கூடிய கண்ணியம், ஒழுங்குமுறை, உரிமைகள், சலுகைகள் என்று எல்லாவிதத்திலும் கவர்கின்றது. இதில் குறிப்பாக மேற்கத்திய பெண்கள் இஸ்லாத்தையும், ஹிஜாபையும் தவறாக எண்ணிய காலம் மாறி பலர் அதனை அறியவும், ஏற்கவும் முனைகின்றனர். http://www.usc.edu/dept/MSA/newmuslims/ என்ற இணயதளத்தில் இதற்கு உதாரணமாக ஒரு மேற்கத்தியப் பெண் தன்னுடைய நிலைப்பட்டை கூறுகிறார். அதை இங்கு பார்ப்போம்.
நஹீத் முஸ்தஃபா - மக்கள் என்னை நோக்கும் போது கிளர்ச்சி காரியாக அல்லது அடிப்படைவாதியாக அல்லது ஏகே 47 என் ஆடைக்குள் மறைத்து வைத்திருப்பதாகவும் அல்லது அடக்கிவைக்கப்பட்ட பெண்ணைக் காட்டும் விளம்பரப்பலகைப் பெண்ணாகக் கண்டார்களோ எனக்குத் தெரியாது. என்னை(Canadian) கனடியர்கள் வினோதமாகப் பார்ப்பதையும், உற்று உற்று பார்ப்பதையும், மறைந்திருந்து பார்ப்பதையும் நான் உணர்ந்தேன். மேலும் என்னை காணும் சிலர் ஏன் இதை அணிந்து மிகவும் துன்பப்படுகிறாள் என்றே நினைக்கிறார்கள். என்னை கேட்கவும் செய்கின்றார்கள். இந்த ஆடையை நான் ஏன் அணிகின்றேன் என்றால் இது முஸ்லிம் பெண்ணான எனக்களிக்கப்பட்ட தனி உரிமை. ஏன்? 21 வயதான குமரிப் பெண்ணான, கனடா நாட்டிலேயே பிறந்து வளர்க்கப்பட்ட பெண்ணான வட அமெரிக்கா நாட்டில் எல்லாவகை சுதந்திரங்களும் அள்ளி அருளப்பட்ட நான். என் மணிக்கட்டு மற்றும் முகம் தவிர மற்ற அனைத்து பாகங்களும் போர்த்திய ஆடையான பர்தாவை அணிகின்றேன். என்றால் எதற்கு? ஏன்? (Bஎcஔசெ இட் கிவெச் மெ fரேடொம்) ஏனெனில் அது எனக்கு முழு சுதந்திரத்தையும் வழங்குவதால்!

பர்தாவை பிற்போக்குத்தனம் என்று கூறுபவர்களின் நோக்கம்:
பர்தாவை பற்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்களின் கூற்று:
1) அது காட்டுமிராண்டித் தனமானது. 2) கெடுதி உண்டாக்கக் கூடிய கலாச்சாரம். 3) பெண்களுக்குள் பர்தா அணிந்தவர்கள் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற அந்தஸ்தை ஏற்படுத்துவதால் அது பொது ஜன விரோதி. 4) நாங்கள் இரு பாலரும் சுதந்திரமானவர்கள்.

ஏன் அவ்வாறு கூறுகிறார்கள்?

மேலை நாட்டினர் அனைவருமே முதலாளித்துவ கொள்கையைக் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மிக அதிகமான தேவைக்கு அப்பாற்பட்ட பொருட்களை விற்கக் கூடிய சந்தைகளை நாடிக் கொண்டேயிருந்தார்கள். தற்சமயம் கீழ் திசை மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் பொருளாதாரம் வளம் பெற்று மக்களிடம் செல்வம் பெருகிவிட்டன. அச்செல்வத்தின் கொள்ளையடிக்கும் பொருட்டு உலக வர்த்தகக் கழகம் தாராளம் பொருளாதாரக் கொள்கை, உரிமை பதிவுகள் (Patent Registration) என்று பலவகையில் இவ்வகை நாடுகள் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த முனைகின்றன.

பர்தா என்ற கேடயம் இங்கேதான் அவர்களை தடுக்கின்றது. பர்தா அணிந்த பெண்ணுக்கு தேவைகள் மிகக் குறைவு. அவளை (ளிபரல்) சுதந்திரமானவளாக ஆக்கிவிட்டால். 1) நவ நாகரீக உடைகள் விற்பனை. 2) காலனிகள் விற்பனை. 3) அழகு சாதப் பொருட்கள் விற்பனை. 4) ஃபேஷன் ஷோ என்றெல்லாம் அலைக்கழிக்கலாம். "பெரும் இலாபத்தினை அடையத் துடிக்கும் பொருளாதார ஆதிக்க சக்திகள் தாங்கள் அடிப்படையில் சார்ந்திருக்கும் உழைக்கும் வர்க்கத்தினைச் சுரண்டும்" ஒரு இனப் போராட்டம் தான் இந்த பர்தா போராட்டம்.

அதே பர்தாவை முஸ்லிம்கள்:
"பொருளாதார, அரசியல் கலாச்சார திணிப்பை அடுத்த நாடுகளின் மீது திணிக்க அயராது முற்படும் மேற்கத்திய உலகின் முயற்சியை" அஹிம்ஸை முறையில் எதிர்கொள்ளும் கேடயம்தான் ''பர்தா'' என்று கூறுகிறார்கள்.
மேலை நாட்டினர் தங்களின் நெறிகெட்ட கலாச்சாரத்தை ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் திணித்து அதன் மூலமாக அந்நாடுகளின் கலாச்சார மனோ பலத்தை சின்னா பின்னமாக்கி தங்களின் பொருட்களுக்கு சந்தையைக்காணவே. நடந்து முடிந்த இரு போர்களும் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் விழுங்கிய பின்னும் அவர்கள் அறிவித்த முதல் கொள்கை பெண்கள் சுதந்திரம் (Lifting of Hijab) ஹிஜாபை விடுவித்தல். முஸ்லிம்களின் கலாச்சாரத்தை, மனோபலத்தை சீரழிக்க வேண்டுமா? பர்தாவை கழற்று.

பர்தா என்பது:
பொருளாதார ஏற்றத்தாழ்வு, இனப்பாகுப்பாடு இரண்டையும் உடைத்தெறிந்து அவளுக்கு ஒரு "உன்னதமான பாதுகாப்பு" என்ற நிலையைக் கொடுப்பது, நாங்கள் வசிக்குமிடம் பொருளாதார வசதியற்றதாக, சுகாதாரமற்றதாக இருந்தாலும் "நாங்கள் உங்களுக்கு சுலபமாக வசப்படும் பறவைகள் அல்ல" என்று பறைசாற்றும் கேடயமே பர்தாவாகும்.

நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

09 August 2005

ஜப்பானியப் பெண்மணியான கவுலா

நான் சத்தியமார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவிய சம்பவம்
(ஜப்பானியப் பெண்மணியான கவுலா அவர்கள், இஸ்லாத்தின் மீதான தன்னுடைய மனமாற்றம் ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கின்றார்கள்)

பிரான்ஸில் நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் பெரும்பாலான ஜப்பானியர்களைப் போலவே நானும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. நான் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.

சார்ட்டர், நீச்சஸ், காமஸ் போன்ற நாத்திகவாதிகளே எனக்கு மிகவும் பிடித்த சிந்தனையாளர்களாயிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நான் மதத்தைப் பற்றிப் படிப்பதிலும் மிகவும் ஆர்வமுடையவளாக இருந்தேன். அது ஏதோ தேவைக்காக அல்ல. ஆனால் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினால் தான். மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிய நான் விரும்பவில்லை. ஆனால் எப்படி வாழ்வது என்பதே என்னடைய அக்கறையாக இருந்து வந்தது. நான் என்னொரு உணர்வு வெகு காலமாகவே எனக்கு இருந்து வந்தது. கடவுள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் எனக்கு ஒன்றாகவே இருந்தது. நான் உண்மையைத் தெரிந்து என்னுடைய வாழ்க்கைப் பாதையை, கடவுளுடனோ அல்லது கடவுள் இல்லாமலோ, தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

இஸ்லாத்தைத் தவிர உள்ள எல்லா மதப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். படிப்பதற்குத் தகுதியான ஒரு மதமாக இஸ்லாம் இருக்கும் என்று நான் ஒரு போதும் எண்ணியதில்லை. என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்களின் ஒருவகையான பழங்காலத்திய சிலை வணக்கமே என்று எண்ணியிருந்தேன். (நான் எவ்வளவு அறியாதவளாகயிருந்திருக்கிறேன்). நான் கிறிஸ்தவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு பைபிளைப் படித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு கடவுள் இருக்கிறார் என நம்பினேன். இறைவன் இருக்கத் தான் வேண்டும் என நான் நம்பினாலும் அவன் இருப்பதை நான் உணர முடியவில்லை. நான் சர்ச்சில் தொழுது பார்த்தேன். ஆனால் அது வீணில் தான் முடிந்தது. இறைவன் இல்லாமலிருப்பதைத் தவிர வேறு எதையும் நான் உணரவில்லை.

ஜென் அல்லது யோகா மூலமாக இறைவனை உணரலாம் என்று நினைத்துக் கொண்டு நான் புத்த மதத்தைப் படித்தேன். கிறிஸ்தவ மதத்தில் இருந்ததைப் போலவே பல உண்மையான விசயங்கள் அதிலும் இருந்ததைக் கண்டேன். ஆனாலும் நான் புரிந்து கொள்ளவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடியாத ஏராளமான விசயங்கள் அதில் இருந்தன. என்னைப் பொறுத்தவரையில், இறைவன் இருந்தால் அவன் எல்லோருக்குமுள்ள இறைவனாக இருக்க வேண்டும். மேலும் சத்தியம் என்பது எளிமையானதாகவும் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும். ஏன் மக்கள் தங்களுடைய வழமையான வாழ்க்கையைத் துறந்து விட்டு இறைவனுக்கே தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இறைவனைத் தேடும் கடும் முயற்சியின் இறுதியை அடைய என்ன செய்வது என எனக்கு தெரியாமலிருந்தது. அப்பொழுது தான் நான் ஒரு அல்ஜீரிய முஸ்லிமைச் சந்தித்தேன். பிரான்ஸிலேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு எப்படித் தொழுவது என்று கூடத் தெரியவில்லை. அவனுடைய வாழ்க்கை ஒரு சரியான முஸ்லிமின் வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தது. ஆயினும் அவன் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவனாக இருந்தான். ஆனால் எந்தவொரு அறிவுமேயில்லாமல் இறைவனை நம்புவதென்பது என்னை எரிச்சல்படுத்தி இஸ்லாத்தைக் கற்கத் தூண்டியது. ஆரம்பமாக பிரஞ்சு மொழியிலுள்ள திருக்குர்ஆனை வாங்கிப் படித்தேன். ஆனால் என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அது மிகவும் விநோதமாகவும் போரடிப்பதாகவும் இருந்தது. தனியாக அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு விட்டு எனக்கு உதவி செய்யும்படி யாரையாவது கேட்பதற்காக பாரீசிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்றேன். சகோதரிகள் என்னை நன்றாக வரவேற்றனர். இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்களை நான் சந்திப்பது அதுவே முதல் முறை.

கிறிஸ்தவ பெண்களுடன் இருக்கும் போது மிகவும் அந்நியத்தை உணர்ந்த நான், வியக்கும் வகையில் முஸ்லிம் சகோதரிகளோடு மிகவும் அன்னியோன்யமாக இருப்பதாக உணர்ந்தேன். ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் சொற்பொழிவில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். முஸ்லிம் சகோதரி ஒருவரால் கொடுக்கப்பட்ட பத்தகம் ஒன்றை படித்தும் வந்தேன். சொற்பொழிவின் ஒவ்வொரு வாக்கியமும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமு; நான் முன்னர் ஒரு போதும் அநியாத ஆத்மீக திருப்தியை தரும் இறை வெளிப்பாடாகவே எனக்கு இருந்தது. சத்திய ஊற்றில் மூழ்கிய உணர்வு என்னுள் பொங்கியது. அதிசயமானது என்னவெனில், ஸ{ப்ஹானல்லாஹ்..! நான் ஸஜ்தாவிலிருக்கும் போது இறைவன் எனக்கு மிக அருகிலிருக்கும் உணர்வைப் பெற்றேன்.

ஹிஜாப் பற்றி கவுலாவின் கருத்தும் அனுபவமும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவிய போது பள்ளிக் கூடத்திற்குள் ஹிஜாப் அணிவதைப் பற்றி மிகவும் சூடான சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மதங்களோடு சரிசம நிலையில் இருக்க வேண்டிய பள்ளியின் கொள்கைக்கு அது எதிரானது என பெரும்பாலோர் கருதினர். முஸ்லிம் மாணவிகள் தங்கள் தலையை ஸ்கார்ப்பினால் மறைப்பது போன்ற சிறிய விசயத்திற்காக அவர்கள் ஏன் அவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என அப்பொழுது முஸ்லிமாகாதிருந் எனக்குப் புரியவில்லை. ஆனால் வேலை இல்லாத் திண்டாட்டம், பெரிய நகரங்களில் நிலவிய பாதுகாப்பின்மை போன்ற மிகவும் மோசமான பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிட்ட பிரஞ்சு மக்கள் அரபு நாடுகளிலிருந்து பணி புரிவதற்காக ஆட்கள் வருவதை எண்ணி மிகவும் எரிச்சல்பட்டார்கள். அவர்கள் தங்களின் நகரங்களிலிருந்து பள்ளிகளிலும் ஹிஜாபை கண்டு மிகவம் மனக் கிலேசத்திற்குள்ளானார்கள்.

மறுபுறம் அரபு நாடுகளில், மேற்கத்திய கலாச்சாரம் வேர்விட்டதால் பர்தா மறைந்து போவதற்குப் பதிலாக, மிகப் பெரும்பான்மையான மேற்கத்தியர்களும் மற்றும் சில அரபியர்களும் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்ததற்கு மாற்றமாக, ஹிஜாபிற்கு, குறிப்பாக இளம் பெண்கள், ஏராளமாக திரும்பி வருவது காணப்பட்டுக் கொண்டிருந்தது.

தற்பொழுது ஹிஜாபின் மறுமலர்ச்சியால் பிரதிபலிக்கப்பட்ட இஸ்லாமிய எழுச்சி காலனித்துவம் மற்றும் பொருளதாரப் பின்னடைவுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்ட அரபு முஸ்லிம்கள் தங்களுடைய கௌரவம், மற்றும் தனித்தன்மை ஆகியவற்றை காப்பாற்றிக் கொள்ள செய்யும் முயற்சியே என்று கருதப்படுகிறது.

அரபுகள் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றி வாழ்வது தொன்று தொட்டு வரும் நடைமுறைகளைப் பின்பற்றுவதாலோ அல்லது மேற்கத்திய எதிர்ப்பு மனப்பான்மையாலே ஏற்பட்டிருக்கலாம் என்று ஜப்பானியர்களுக்கு தோன்றலாம். ஏனெனில் மேற்கத்தியவர்களுடன் தொடர்ப கொண்ட பிஜீ காலத்தில் அவர்களும் இத்தகைய எதிர்ப்புணர்ச்சியை உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான் மேற்கத்திய வாழ்க்கை முறை, உடை ஆகியவற்றிற்கு எதிர்ப்பாகச் செயல்படுகின்றனர். மனிதன் எப்போதுமே பழமைவாத உணர்வுகளைக் கொண்டவனாக இருக்கிறான். ஆகவே தான் புதிய அல்ல தெரியாத எதுவாக இருந்தாலும் அது அவனுக்கு நன்னமை பயக்கக் கூடியதா அல்லது தீமை பயக்கக் கூடியதா என்று உணராமல் எதிர்க்கிறான். தங்களுடைய பரம்பரை பழக்க வழக்கத்திற்கு அடிமையானதாலும் தங்களுடைய துயரமிக்க நிலையை சரிவர தெரிந்து கொள்ளாததாலுமே முஸ்லிம் பெண்கள் ''நசுக்கப்பட்ட சூழ்நிலை"" யின் சின்னமாக ஹிஜாபை அணிய வேண்டுமென வற்புறுத்துகின்றனர் என சிலர் இன்னும் நினைக்கின்றனர். பெண் விடுதலை மற்றும் சுதந்திர இயக்கம் அவர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினால் அவர்கள் ஹிஜாபை தூர எறிந்து விடுவார்கள் எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.

இஸ்லாத்தைப்பற்றி சொற்ப அறிவே உள்ள சிலர் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். உலகாதாய மற்றும் பல்வேறு மதக் கொள்கைகளைப் பின்பற்றும் மனோப்பாங்குள்ளவர்கள் இஸ்லாத்தின் போதனைகளை உலகளாவியவை, எக்காலத்திற்கும் ஏற்றவை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எவ்வாராயினும், ஏராளமான அரபுகளல்லாத பெண்களும் இஸ்லாத்தை சத்திய மார்க்கமென ஏற்று அதைத் தழுவி தங்களுடைய தலையை மறைத்து வருகின்றனர். அது போன்ற பெண்களில் நானும் ஒருத்தி.

நன்றி: தமிழ் இஸ்லாம்.காம்

04 August 2005

பர்தா(ஹிஜாப்) பற்றி Dr.ஜாகிர் நாயக்


கேள்வி: இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

பதில்: இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் - இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு - உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு - போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு - மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன.

A. பாபிலோனிய நாகரீகம்: பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது.

B. கிரேக்க நாகரீகம்: பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி 'பெருமைக்குரிய' நாகரீக காலத்தில் - பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். 'பண்டோரா' என்றழைக்கப்பட்ட 'கற்பனைப் பெண்மணி' யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் - ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள். கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்ட காலத்தில் பெண்கள் - உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் - ஆண்களுக்கு உரிய தான் என்ற அகம்பாவத்தாலும் - பாலியியல் பலாத்காரங்களுக்கும் - பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் - விபச்சாரம் பரவலாக காணப்பட்டது.

C. ரோமானிய நாகரீகம்:ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் - பெண்களை நிர்வாணமாக பாhப்பதுவும் - ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது.

D. எகிப்திய நாகரீகம்:
எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் - சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள்.

E. இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்:அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு - அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள்.

2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

ஆண்களுக்குரிய 'ஹிஜாப்'

வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் 'ஹிஜாப்' முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ், பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

பெண்களுக்குரிய 'ஹிஜாப்'

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் (விசுவாசம் கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்... ஆகிய இவர்களைத் தவிர(வேறு ஆண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்:1. நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.
இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் - ஆண்களுக்கும் - பெண்களுக்கும் சமமானவையே.

2. அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.

3. அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது - உரத்த ஆடையாக இருக்க வேண்டும்

4. அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் - ஆண்கள் - பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

5. ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் - பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

6. அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம்  போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

3. இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் - பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது.

மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் - இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும்.

ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு - தனது கண்களிலும் - தனது உள்ளத்திலும் - தனது எண்ணத்திலும் - இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது - ஒருவர் நடக்கும் விதத்திலும் - அவர் பேசும் விதத்திலும் - அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

4. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:
பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:
இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

5. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.
இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?.

நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

6. மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது - பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் - பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் - பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் - மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை. மேற்கத்திய உலகம் - சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது - பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் - அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே - பெண்விடுதலை என்கிறார்கள். 'கலை' மற்றும் 'கலாச்சாரம்' என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.

7. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் - அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு - 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் 'தீவிரமாக' வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

அமெரிக்காவில் இஸ்லாமிய 'ஹிஜாப்' முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?.

8. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்.

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் - ஐரோப்பாவாக இருக்கட்டும் - அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ - அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் - கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது.

நன்றி: தமிழ்முஸ்லிம்.காம்