Pages

31 July 2008

குங்க்ஃபூ கற்கும் ஹைதராபாத் பள்ளி முஸ்லிம் மாணவிகள்!

சீன மொழியில் உஷு (武术 - wushu martial arts) எனப்படும் வீரமிக்க போர் தந்திரக் கலையை ஹைதராபாத்தில் உள்ள St. Maaz high school முஸ்லிம் பெண்களுக்கு பயிற்றுவிக்கிறது. பள்ளி வளாகத்திற்கு உள்ளாகவே வாரம் ஒருமுறை பயிற்றுவிக்கப்படும் இக்கலையினை இப்பள்ளியின் பெண்கள் ஆர்வமுடன் கற்றுத் தேர்ந்து வருகின்றனர்.

23 July 2008

ஹிஜாப் அணிந்தால் வேலை இல்லையா? எதிர்த்துத் தொடுத்த வழக்கில் வெற்றி!

சகோதரி புஷ்ரா நோவா

ஹிஜாப் அணிந்து பணிக்கு வந்த ஒரே காரணத்தினால், பத்தொன்பது வயதுள்ள புஷ்ரா நோவா என்ற முஸ்லிம் பெண், தான் பணிபுரியும் ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஸாரா டெஸ்ரோஸிர்ஸ் என்பவரால் கடந்த மே-2008 இல் பணி நீக்கம் நீக்கப்பட்டுள்ளார்.

22 July 2008

பர்தா அணிந்த முஸ்லிம் பெண் குடியுரிமை வழங்க பிரான்ஸ் மறுப்பு


ஹிஜாப் அணிந்த காரணத்தினால், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கு குடியுரிமை வழங்க பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரி பாய்சா. இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். 2000ம் ஆண்டிலிருந்து பிரான்சில் வசித்து வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அனைத்தும், பிரான்ஸ் நாட்டிலேயே பிறந்தன. பிரெஞ்ச் மொழியிலும் பாய்சா நன்றாகப் பேசுவார். கடந்த 2005ம் ஆண்டில், இவர் பிரான்ஸ் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். ஆனால், பிரான்ஸ் நாட்டு கலாசாரத்துடன் இன்னும் ஒன்றுபடவில்லை எனக் கூறி, அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

15 July 2008

சாதனை படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்


சாதனை படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்
ஹிஜாப் பெண்களைச் செயலிழக்கச் செய்கிறது, அவர்களது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது போன்ற அரதப் பழசான எதிர்மறைச் சிந்தனைகள் இத்தகைய செய்திகள் மூலம் தகர்த்தெறியப் படுகின்றன.

03 July 2008

ஆடையில் தான் உள்ளது நாகரிகம் - டாக்டர் டி. நாராயண ரெட்டி!

சென்னை. பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன்.

"விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம்..." சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.

27 May 2008

சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்!

தாங்கள் சுயவிருப்புடன் அணியக் கூடிய ஹிஜாபுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் மேற்குலக முஸ்லிம் பெண்களின், "என் தலைக்கு உள்ளேயுள்ள அறிவுக்கூர்மையினைக் கொண்டு என்னை மதிப்பிடு; தலைக்கு மேலே உள்ள ஹிஜாபைக் கண்டு அல்ல!" - என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகள் பிரபலம்.
அந்த வாசகங்கள் எத்துணை உண்மையானவை என்பதை மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கச் செய்துள்ளனர் முஸ்லிம் சகோதரிகள்.

14 April 2008

ஜெர்மனியில் முஸ்லிம் பெண்களுக்கான உடற்பயிற்சி மையம்!

உடலை இறுகப் பிடிக்கும் அரைகுறை ஆடைகள், அரைநிர்வாண கோலங்கள் ஏதுமில்லாத ஓர் உடற்பயிற்சி மையத்தை அதுவும் முஸ்லிம் பெண்களால் முஸ்லிம் பெண்களுக்காக நடத்தப்படும் ஓர் உடற்பயிற்சி மையத்தைக் கற்பனை செய்ய முடியுமா?

16 October 2007

கண்ணியம் கொடுத்த ஹிஜாப்! - ஸாரா போக்கர்

சுதந்திரம் பற்றிப் பேசிப்பேசி அதன் எல்லை எதுவென்பதை ஒவ்வொரு முறையும் வரையறுத்து பின் அதை அறுத்து பின் புதிதாய் வரையறுத்து மனித மனம் எங்கோ தேடி அலைந்து கொண்டிருக்கிறது. மனிதனைப் படைத்த இறைவனே, மனித உள்ளங்களில் ஓடக்கூடிய உணர்வுகளை அறிவதில் வல்லவன். இறைவசனங்களின் மூலம் இஸ்லாம் பெண்ணுக்கு வலியுறுத்தக்கூடிய உடை அளவிலான கட்டுப்பாட்டை, அவளின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்பதாக ஒரு சாரார் பேசிக்கொண்டிருந்தாலும் பேசுபவர் ஒவ்வொருவரும் தத்தம் அளவிலான உடைக் கட்டுப்பாடுகளை தத்தம் கலாச்சாரச் சூழல்களுக்கு ஏற்றபடி அளவுகோலை வைத்துள்ளனர் என்பதே யதார்த்தமாகும்! அதை மீறும்போது அதன் மூலம் ஆபத்துக்களையும், கலாச்சாரச் சீரழிவுகளையும் சந்திக்கின்றனர். அத்தகைய தேடல்களின் ஓட்டத்தில் சுதந்திர வேட்கையின் உச்சத்திற்குச் சென்று திரும்பியுள்ள ஒரு பெண்ணின் பேட்டி இங்கே, ஆடையில் சுதந்திரம் வேண்டும் என்று கேட்போரின் கவனத்திற்காக முன்வைக்கப்படுகிறது.

- அபூ ஸாலிஹா

20 June 2007

பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல்

ந்திய ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருமதி.பிரதிபா படீல், "இந்தியப் பெண்கள் பர்தா அணிவது மடமை; இப்பழக்கம் முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து பெண்களைக் காத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டது. தற்போது நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம். ஆகவே இப்பழக்கத்தை கைவிட வேண்டும்!" என்று சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார்.

15 June 2007

திருக்குர்ஆனில் பெண்கள்!

ஆண்கள் உலகில் பெண்கள் காலாகாலமாக பல கோணங்களில் பார்க்கப்படுகிறார்கள். விவாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களை மிக உயர்ந்த உன்னதப் படைப்பாக பார்த்து கவுரவிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை மிக மட்டரகமாக பார்த்து இழிவுபடுத்தும் ஆண்கள் மறுபுறம்.

பெண்களை தாய்மையுடன் பார்த்து மதிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை வெறும் பாலியல் இயந்திரமாக பார்த்து பழகிப் போன ஆண்கள் மறுபுறம்.

15 May 2007

ஹிஜாப் தரும் சுதந்திரம்!


ன்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
 

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

04 April 2007

ஹிஜாப் - சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்!

இது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஹிஜாப் முறையை விரும்பிப் பின்பற்றும் பெண்கள், சமூகத்தில் தினந்தோறும் சந்திக்கும் பிரச்னைகளைக் குறித்த ஓர் உரையாடல்! இவ்வாக்கத்தை தமது தளத்தில் பதிக்க அனுமதி அளித்த சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு எனது நன்றி!

15 December 2006

உடை ஒரு தடையா? பாகம்-2

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஹிஜாப் என்பது தடைக்கல்லை ஏற்படுத்துமா?
கிட்டத்தட்ட உடைகளே உடைகளில் இல்லை என்ற ரீதியிலான போட்டியாளர்களுடன் ஹிஜாப் அணிந்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடம் வென்ற பஹ்ரைனைச் சேர்ந்த அல் கஸரா ருக்கையா (Al Ghasara Ruqaya)

இறைவன் ஒன்றை எளிதாக்கியிருக்க அதைத் தடைக்கற்களாக்க எவரால் இயலும்?
இறைவன் தடையேற்படுத்தியிருப்பதை எளிதாக்க எவரால் இயலும்?

கத்தர் நாட்டில் கடந்த 2006 இல் மெடல்ஸ் டாலி ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருக்கையா வென்ற வீடியோ படக்காட்சி:



25 November 2006

சகோதரி யுவான் ரிட்லியின் கட்டுரை!

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்...

"நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.

15 July 2006

இவான் ரிட்லி (Yvonne Ridley) பேட்டி வீடியோ!

இஸ்லாத்தின் பால் தான் கவரப்பட்ட விதம் பற்றிய இவான் ரிட்லி அவர்களின் பேட்டி



இவான் ரிட்லி அவர்களின் தளம்: http://www.yvonneridley.org/

29 March 2006

ஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்!

ஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்
தடையை எதிர்த்து வழக்குப்போட்டு வெற்றி பெற்றார்



ஆர்ம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்த முஸ்லிம் பெண், ஆண்களின் கைகளை குலுக்க மறுத்து விட்டார். இதனால் பயிற்சிக் கல்லூரி அவரைச் சேர்ப்பதற்கு தடை விதித்து விட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அவர் அதில் வெற்றி பெற்றார்.

20 வயது பாத்திமா

நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் பெண் பாத்திமா அம்கர். 20 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேருவதற்காக மனு செய்து இருந்தார்.இதற்கான நேர்முகத்தேர்வுக்கு அவர் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரை நேர்முகத் தேர்வு செய்ய இருந்த ஆசிரியர்கள் கைகுலுக்குவதற்காக கையை நீட்டியபோது கைகொடுக்க மறுத்து விட்டார்.

மதக்கட்டுப்பாடு

12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுடன் எந்தவிதமான ஸ்பரிசத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய மதக் கட்டுப்பாடு என்று பாத்திமா அதற்கு விளக்கமும் கொடுத்தார்.

இதை கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. கைகுலுக்குவது டச்சு சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரியாதை தெரிவிக்கும் அடையாளம் ஆகும் என்று கூறிய நிர்வாகம், அவரைச் சேர்ப்பதற்கு தடைவிதித்தது.

கோர்ட்டில் வழக்கு

இதை எதிர்த்து பாத்திமா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சமமாக நடத்தும் கமிஷன் தடை விதித்ததன் மூலம் பாத்திமாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்று கூறி பாத்திமாவை கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டு உள்ளது.

ஒதுக்கும் ஆபத்து

முஸ்லிம்களின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமுதாயத்தில் இருந்து முஸ்லிம் பெண்களை ஒதுக்கி வைக்கும் ஆபத்தை கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி விடும் என்றும் கமிஷன் எச்சரித்தது.

இதே கமிஷன் தான் கடந்த ஆண்டு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வர மறுத்த முஸ்லிம் பெண் சமீராவை ஆசிரியராகச் சேர்க்க மறுத்த இஸ்லாமிய பள்ளிக்கூடத்துக்கு எதிராக தீர்ப்பு கூறியது.

இது தொடர்பான ஆங்கிலச் செய்திகளுக்கு:

இஸ்லாம் ஆன் லைன்.காம்

யாஹூ செய்திகள்

ஸ்விஸ் பாலிடிக்ஸ்

05 March 2006

ஆண்களும், பெண்களும்!

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:124
___________________________________________________

3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். 'உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்...

ஸூரத்துல் ஆலஇம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) 3:195
___________________________________________________

இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்.

ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:221
___________________________________________________

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.

ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:228
___________________________________________________

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:32
____________________________________________________

4:7 பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே¢ (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:7

01 March 2006

பாலியல் பலாத்காரம் - அமெரிக்காவிற்கே முதலிடம்

மெரிக்காவிலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 70 விழுக்காட்டினர் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அமெரிக்கப் பெண்கள் பல்கலைக்கழக சங்கம் (American Association of University Women) சமர்ப்பித்த தகவல்களின் படி, பெரும்பாலான இத்தகையப் பாலியல் தொந்தரவுகள் நடைபெறுவது கடைவீதிகளிலோ, அல்லது மற்ற பொது இடங்களிலோ அன்று; மாறாக, அமெரிக்கக் கல்லூரி வளாகங்களுக்குள்ளேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மூன்றில் இரண்டு பகுதியினருக்கும் மேலான மாணவ மாணவியர்களுக்கு உடல் ரீதியான இத்தகைய தொந்தரவுகள் கல்லூரிகளில் எதிர்பால் மாணவர்கள் மூலம் ஏற்படுவதாகவும் 10 விழுக்காடு மாணவர்களுக்கு எதிர்பால் பள்ளி அலுவர்கள்/ஆசிரியர்கள் மூலம் ஏற்படுவதாகவும் அறிக்கை நீள்கிறது. (புள்ளிவிபரங்களுக்கு நன்றி: Reuters - 24-02-2006)

ஒரே வகுப்பறைகளில் படிக்கும் மாணவர்களும், ஒத்த வயதுடைய மாணவியர்களும் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசி, பழகிக்கொள்ளும் வாய்ப்பு வசதிகளையும் கொண்டதால் இம்மாதிரியான தவறுகள் நடப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சாட்டிங், செல் போனில் அரட்டை, செக்ஸ் ஜோக்குகளை பரிமாற்றிக்கொள்ளுதல் என்ற ரீதியில் வளரும் இந்த நவீன நட்பு(?), விபரீதத்தில் சென்று முடியும் போது மட்டும் குய்யோ, முறையோ எனும் கூக்குரல் எழுகிறது.
ஈவ் டீஸிங்-கில் ஆரம்பித்து பாலியல் பலாத்காரம் வரை கல்வி கற்கும் மாணவர்கள் அனுபவித்து வரும் உடல் மற்றும் மன ரீதியிலான சிக்கல்களைத் தினந்தோறும் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். கடுமையான(?) சட்டங்களைப் பிறப்பித்து இதைத் தடுத்துவிடலாம் என்று அரசாங்கம் எண்ணினாலும் இதற்குத் தீர்வுகாண முடியவில்லை. நாளொரு பலாத்காரமும் பொழுதொரு தற்கொலையுமாக தினம் போய்க்கொண்டுதான் இருக்கிறது.

சரி.. இதன் தீர்வு தான் என்ன? எங்கேயும் தேடி சிரமப்பட வேண்டியதில்லை. திருமறைக் குர்ஆன் மிக எளிய வழியைக் கூறுகிறது.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.(அல் குர் ஆன் 17:32)

விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்பது, ஏதோ விபச்சாரிகளைத் தேடிப்போகாதீர்கள் என்று பொருளல்ல. விபச்சாரம் செய்ய அல்லது அதைத்தூண்டுவதற்கான காரணிகளைக் கண்டுபிடித்து அதன் வாசல்களை அடையுங்கள் என்பதே!

உலக நாடுகளின் பிரச்னைகளை தீர்க்கவே(?) தான் அவதாரம் எடுத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, தன் நாட்டில் பெருகிவரும் இத்தகைய பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக முதன் முறையாக கவலை தெரிவித்திருப்பதும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய முற்படும் முயற்சிகளும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பிரச்னையையும் இவ்வுலகத்திலிருந்து முற்றிலுமாக நீக்க, அதன் ஆணிவேரை அலசி ஆராய்ந்து அடியோடு ஒழிக்க நினைக்கும் உலக அரசு இயந்திரங்கள், இவ்விஷயத்தில் பாராமுகமாக இருந்து விடாமல் இஸ்லாம் அறிவுறுத்தும் வழிகளைக் கையாண்டால் இத்தகைய பாலியல் பலாத்காரங்களை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

21 January 2006

பாதுகாப்பு! (கவிதை: ஜெஸிலா ரியாஸ், துபாய்)

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது

எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

நன்றி: நண்பன் (ஜனவரி திசைகள் இதழ்)

04 January 2006

இஸ்லாம் பற்றி ஜப்பானியபெண்!

சமீபத்தில் நடைபெற்ற வளைகுடா விளையாட்டுப்போட்டிகளுக்கான செய்திகளைத் தொகுப்பதற்காக கத்தர் நாட்டிற்கு வந்திருந்த ஜப்பானின் பிரபல விளையாட்டு செய்திபத்திரிகையாளரான மயோக்கோ என்ற கிறிஸ்துவ பெண் சென்றவாரம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

"குர்ஆன் கூறும் வாழ்வியல் நெறியே என்னை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது" என்று கூறும் இவருடன் நடந்த நேர்காணல்:

Largest Mosque in Tokyoகேள்வி: இஸ்லாத்தை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?
பதில்: 9/11 தாக்குதலுக்குப்பிறகு இஸ்லாத்தையும் அதன் வரலாற்றுபின்னணியையும் தெரிந்துகொள்ளும் ஆவல் எனக்குப் பிறந்தது. அதற்கான ஒரு முயற்சியாக, செய்தி ஊடகங்கள் சித்தரிக்கும் "இஸ்லாமிய தீவிரவாதம்" பற்றிய ஆய்வில் இறங்கினேன். இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டி அரபி மொழியைக்கற்றுக்கொண்டேன். திருக்குர்ஆனின் மூலமொழியான அரபியைக்கற்று திருக்குர்ஆனை முழுமையாக படித்துப்பார்த்த எனக்கு பல விஷயங்கள் அதிர்ச்சிகரமான இருந்தது. செய்தித்துறையில் பணியாற்றும் நான், இஸ்லாத்தைப்பற்றி எவ்வாறு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என்பதை அப்போது தான் தெரிந்துகொண்டேன்.

இஸ்லாத்தைப்பற்றி ஜப்பானியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
இதைச் சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. ஜப்பானியர்கள் இஸ்லாத்தைப்பற்றி அதீத அச்சமும், தவறான எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள். காரணம், மேற்கத்திய செய்தி ஊடங்கள் இஸ்லாத்தைப்பற்றிய தவறான செய்திகளைத்தான் எங்களுக்கு தந்துகொண்டிருக்கிறன.

இஸ்லாத்தில் உங்களைக்கவர்ந்தது எது?
பல விஷயங்களைச் சொல்ல முடியும். முக்கியமாக சகோதரத்துவம், உறவினர் மற்றும் அண்டை வீட்டார்களைப் பேணும் முறைகள், பணக்காரர்கள், ஏழைகளுக்கு செலவு செய்யும் திட்டங்கள், சத்தியத்தைப்பேணுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நான் திருக்குர் ஆனில் கூறப்பட்ட இக்குணங்களை நேரில் இந்நாட்டு மக்களிடம் செயல்முறையில் கண்கூடாக கண்டதில் எனக்கு பெரும் ஆச்சரியம்.

ஹிஜாப் அணிவது பற்றி கூறுங்களேன்?
ஹிஜாப் அணிவதை நான் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். இதை நான் வாழ்நாள் முழுவதும் என்றென்றும் கடைபிடிப்பேன்.

நீங்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு உங்கள் நண்பர்கள் யாரேனும் உதவினார்களா?
ஆம்! அஹ்லம் என்கிற கத்தர் நாட்டு பெண்மணி இஸ்லாத்தைப்பற்றி பல்வேறு தகவல்களைத் தந்து எனக்கு ஆர்வமூட்டினார். தூய இந்த மார்க்கத்தை ஆழமாக அறியச்செய்த அவருக்கு, நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் இஸ்லாத்தை தழுவிய விஷயம் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா?
இதுவரை தெரியாது.

ஜப்பானுக்கு திரும்பிச்செல்லும் நோக்கம் உள்ளதா?
இல்லை. எனக்கு இங்குள்ள இஸ்லாமிய சூழல் மிகவும் பிடித்துள்ளது. எனவே, இங்கேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன்.

உங்கள் திருமண ஏற்பாடுகள் பற்றி?
இறைவன் நாட்டத்தினால், கண்டிப்பாக நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொள்வேன். அவர் என்னை புரிந்து நடப்பவராகவும் விளையாட்டில் ஆர்வமுள்ளவராகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.